அவமானப்பட்ட ரஞ்சித்! தினகரனுடன் சேர்ந்து அன்புமணியை எதிர்த்து தேர்தலில் போட்டி!

பாட்டாளி மக்கள் கட்சியில் இருந்து நடிகர் ரஞ்சித் வெளியேறியதற்கு முழுக்க முழுக்க காரணம் அன்புமணி என்ற தகவல் வெளிவந்துள்ளது,..


மாற்றம், முன்னேற்றம் அன்புமணி என்ற சிந்தனையைப் பார்த்து பாட்டாளி மக்கள் கட்சியில் சேர்ந்தார்  நடிகர் ரஞ்சித்.. உடனடியாக அவருக்கு மாநில துணைத் தலைவர் பதவி வழங்கப்பட்டது. ஆனால், பொதுக்கூட்டங்களில் கலந்துகொண்டு பேசுவதற்கும், தொலைக்காட்சி விவாதங்களிலும் கலந்துகொள்ள அனுமதி மறுக்கப்பட்டது.

ஆர்வத்துடன் கட்சியில் சேர்ந்த ரஞ்சித் இதனால் அப்செட் ஆனார். ஏன் வாய்ப்பு இல்லை என்று விசாரிக்கையில்தான், அன்புமணிக்குப் போட்டியாக யாரையும் கட்சியில் வளரவிடுவது பா.ம.க.வின் வழக்கத்தில் இல்லை என்பது சொல்லப்பட்டது.. நான் அப்படியெல்லாம் உங்களை மீறி நடக்க மாட்டேன் என்று ராமதாஸிடம் சொன்னபோது, அவரிடம் இருந்து அவமானம்தான் கிடைத்ததாம்.

அன்புமணியை மீறி வளர்ந்துவிடுவார் என்பதாலே வேல்முருகன் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். அதேபோன்று அன்புமணி கலந்துகொள்ளும் மீட்டிங்கில் பாலு, மூர்த்தி போன்றவர்களைக்கூட அருகில் பேசுவதற்கு விட மாட்டார்கள். ஏனென்றால், சிறப்பாகப் பேசி பேர் வாங்கிவிடுவார்கள். இதுதான் பா.ம.க. பாலிசி.

இதனை எதிர்பார்க்காத ரஞ்சித் அதிர்ச்சியில் இருந்தார்.  இந்த நிலையில்தான் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அறிவிப்பு வெளியாகவே, கடுமையாக  எதிர்ப்பு தெரிவித்து கட்சியில் இருந்து வெளியேறியிருக்கிறார்.

 இதுகுறித்து அவர், ‘’நான் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் பா.ம.க.வில் சேர்ந்தேன். ராமதாஸ் வழிகாடுதல் மூலம் மக்களுக்கு சேவை செய்யவேண்டும் என்று ஆசைப்பட்ட்டேன். அதனால்தான் மக்கள் நலனுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட 8 வழிச்சாலைக்கு எதிராக போராட்டம் நடத்தினேன். நான் முன்னே நின்று போராடியதால் என் மீது வழக்கு போடப்பட்டுள்ளது. 

ஆனால், மக்கள் நடத்திய போராட்டத்தையும், மக்கள் நலனையும் மறந்து பதவிக்காகவும், பணத்துக்காகவும் ஊழல் கட்சியான அ.தி.முக.வுடன் சேர்ந்துவிட்டனர்.  .  டயர் நக்கி, மடையன், புறம்போக்கு, அடிமை, ஆண்மை அற்ற்வர்கள் என்றெல்லாம் பேசிவிட்டு எப்படி அவர்களுடன் இணைந்து செயல்பட முடியும். 

அன்புமணிதான் முக்கியம் என்று நம்பி வந்தேன். என் கனவில், நம்பிக்கையில் அன்புமணி மண்ணள்ளிப் போட்டுவிட்டார்.   அரசியல் நாடகம் நடத்தும் இதுபோன்ற போலிகளை கண்டறிய வேண்டும்.- என்றும் கூறியிருக்கிறார். 

மேலும், தொண்டர்களை சந்தித்து கருத்து கேட்ட பின்னரே கூட்டணி என்று கூறியதை கேட்டதும் சிரிப்புதான் வந்தது. எந்தத் தொண்டரிடம் கேட்டார்கள் என்பதை சொன்னால் நல்லது. நான்கு பேருக்கு கூஜா தூக்கிகொண்டு என்னால் இருக்க முடியாது. 

யாரை எதிர்த்து போராடினோமோ  அவர்களுடன் ஒன்று சேர்ந்து விருந்து சாப்பிடுவதும், அவர்களுக்கு ஆதரவு தெரிவிப்பதும்  வேதனையளிக்கிறது.. நம்பிக்கையுடன் இருந்த தொண்டர்களையும், பொதுமக்களையும் நொடிப்பொழுதில் ஏமாற்றிவிட்டனர். 

இப்போது உள்ளாட்சித் தேர்தல் வரை அதிமுகவுடன் இணைந்திருப்பார்கள், அதன்பிறகு விலகி வேறு கட்சிக்குப் போய்விடுவார்கள். அவர்களுக்கு தமிழக மக்கள் நலன் தேவையில்லை. இன்னும் எத்தனை காலம்தான் ஏமாற்றுவார்கள் என்று கேள்வி எழுப்பியிருக்கிறார் ரஞ்சித்.

இப்போது பா.ம.க.வில் இருந்து வெளியே வந்திருக்கும் ரஞ்சித் இப்போது தினகரனின் அ.ம.மு.க.வில் சேர்ந்திருக்கிறார்.  அன்புமணி போட்டியிடும் தொகுதியில் எதிர்த்து நிற்க ஆசைப்படும் ரஞ்சித்துக்கு அந்த வாய்ப்பு குடுக்க தினகரன் தயாராக இருக்கிறார்.  விரைவில் மேடைகளில் பா.ரஞ்சித் அன்புமணியை விளாசுவதைப் பார்க்க முடியும்.