ஒரு பாட்டில் விஷ்கி! நடிகைக்கு நடிகர் அளித்த பிறந்த நாள் பரிசு!

நடிகை சார்மி கவுர் தனது பிறந்தநாளை இன்று(மே 17) வெகு விமர்சையாக கொண்டாடினார்.


இவருக்கு பலரும் தங்களது வாழ்த்துக்களையும் பரிசுகளையும் வழங்கினார். அதில் நடிகர் ஒருவர் வழங்கிய பரிசு ஒன்று பெரிதாக பேசப்பட்டது. அது வேறு யாரும் இல்லை நடிகர் ராம் போதினி தான்.  இவர் ஒரு சிறப்பு பரிசை சார்மிக்கு பிறந்த நாள் பரிசாக வழங்கி உள்ளார்.  ராம் போதினி சார்மிக்கு விஸ்கி பாட்டில் ஒன்றை பரிசாக அளித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது. இதனை சார்மியின் பிறந்தநாளிற்கு முந்தினமே இவர் வழங்கி உள்ளார்.

இந்த பரிசு பொருளை தனது ட்விட்டர் பக்கத்தின் மூலம் உறுதி செய்தார் நடிகை சார்மி. அதில் அவர் ராமுடன் இணைந்து எடுத்து கொண்ட புகைப்படத்தை பதிவு இட்டு இருந்தார். மேலும் கேப்ஷனாக " என் பிறந்த நாளுக்கான மிக பெரிய ஆச்சர்யமூட்டும் வகையில் பரிசு அளித்ததற்கு நன்றி ராம், மேலும் இதில் சிறந்த விஷயம் என்ன வென்றால் நான் அவுட் டோர் ஷூட் செல்லும் போது எனக்கு இது தேவைபடும் என்று நினைத்து எனக்காக இதனை தந்து உள்ளார் " என்று பதிவு இட்டு இருந்தார்.

இதற்கு பதில் அளித்த ராம், "பாஸ் லேடி உங்கள் வயதை கணக்கிடாதீர்கள் பதிலாக உங்கள் அனுபவத்தை கணக்கிடுங்கள்" என்று கூறினார். மேலும் சார்மி, இயக்குனர் பூரி ஜெகன்நாத் இயக்கும்  "இச்மரட் ஷங்கர்" என்ற திரைப்படத்திற்கு இணை தயாரிப்பாளராக  உள்ளார். இந்த திரைப்படத்தில் ராம் போதினி ,  நிதஹி அஜீர்வேல், நாபா நடேஷ் ஆகியோர் நடிக்கின்றனர்.

நடிகை சார்மி மாஸ், அணுகொக்குண்ட ஒக்க ரோஜு லட்சுமி மற்றும் பௌர்ணமி போன்ற வெற்றி படங்களில் நடித்து உள்ளார். ஆனால் இவருக்கு தற்போது நடிப்பதில் ஆர்வம் இல்லை என்று தெரிவித்து உள்ளார்.