சூப்பர் ஸ்டார் நடிகரின் தந்தைக்கு கேன்சர்! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

சூப்பர் ஸ்டார் நடிகர் ஒருவரின் தந்தைக்கு கேன்சர் இருப்பது தெரியவந்துள்ளது.


இந்தி நடிகர்களில் சூப்பர் ஸ்டார்களில் ஒருவராக விளங்குபவர் ஹிருதிக் ரோசன். தூம் படத்தின் மூலம் ஹிர்திக் ரோசன் தமிழ் ரசிகர்களுக்கும் அறிமுகமானவர். ஹிர்திக்கை வைத்து படம் எடுப்பது குறித்து இயக்குனர் ஷங்கர் யோசித்து வருவதாக அண்மையில் தகவல் வெளியானது. ஹிர்திக்கின் தந்தை ராகேஷ் ரோசன். இவரும் நடிகராக இருந்தவர். மேலும் திரைப்படங்களையும் இயக்கியுள்ளார்.

   திரையுலகில் ராகேஷ் ரோசன் செய்யாத வேலையே இல்லை என்று கூறலாம். ஏனென்றால் திரைக்கதை எழுதுவார், எடிட்டிங் செய்வார், நடிக்கவும் செய்வார். அந்த அளவிற்கு பன்முக திறமை கொண்ட ராகேஷ் ரோசன் தனது மகன் நடிக்க வந்த பிறகு நடிப்பதை நிறுத்திவிட்டார். ஆனால் திரையுலகில் ஹிர்திக் ரோசனுக்கு ராகேஷ் ரோசன் உதவிகரமாக இருந்து வருகிறார்.

   இந்த நிலையில் இன்று காலை தனது ட்விட்டர் பக்கத்தில் ஹிர்திக் ரோசன் அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்டார். அதாவது தனது தந்தைக்கு கேன்சர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். துவக்க நிலையிலேயே கேன்சர் கண்டுபிடிக்கப்பட்டுவிட்டதால் அறுவை சிகிச்சை மூலம் அதனை அகற்றி விடலாம் என்றும் ஹிர்திக் கூறியுள்ளார். தனது தந்தைக்கு தொண்டையில் கேன்சன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

   இந்த தகவலை ட்விட்டரில் ஹிர்திக் ரோசன் பகிர்ந்ததை பார்த்த பிரதமர் மோடி அதனை உடனடியாக ரீட்வீட் செய்தார். மேலும் ராகேஷ் ரோசன் பூரண குணம் அடைய கடவுளை வேண்டுவதாகவும் மோடி குறிப்பிட்டிருந்தார். இதற்கு நன்றி தெரிவித்து ட்விட் செய்த ஹிர்திக் ரோசன், தனது தந்தைக்கு அறுவை சிகிச்சை நடைபெற்று முடிந்துவிட்டதாக கூறியுள்ளார்.

   அறுவை சிகிச்சை இருப்பது தெரிந்தும் கூட தனது தந்தை காலையில் உடற்பயிற்சி கூடத்திற்கு வந்து உடற்பயிற்சிகளை முடித்துவிட்டு சென்றதாகவும் ஹிர்திக் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். தனது தந்தை ஒரு போராளி என்றும் கேன்சரை வென்று திரும்புவார் என்றும் ஹிர்திக் தெரிவித்துள்ளார். அவர் கூறியது போலவே ராகேஷ் ரோசன் கேன்சர் குணமாகி திரும்ப நாமும் வேண்டுவோம்.