51 வயது இயக்குனருக்கு 2வது மனைவியாகும் 33 வயது நடிகை! காரணம் தெரியுமா?

51 வயதாகும் வேதாளம் திரைப்படம் வில்லன் நடிகர் ராகுல் தேவ் 33 வயது ஆகும் நடிகை முக்தா கோட்சேவை காதலித்து வருவதாகவும் விரைவில் அவரை வில்லன் நடிகர் இரண்டாவதாக திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.


பிரபல நடிகர் ராகுல் தேவ் (வயது 51) இந்தி சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். இவர் இந்தி மட்டுமல்லாமல் தமிழ் ,தெலுங்கு, மலையாளம், என பல மொழிகளில் நடித்து முன்னணி நடிகராக வலம் வருகிறார். இவர் தமிழில் அஜித் நடிப்பில் வெளியான வேதாளம் திரைப்படத்தில் வில்லனாக நடித்திருந்தார்.

அதுமட்டுமில்லாமல் நடிகர் ராகுல் தேவ், நரசிம்மா , மழை , ஜெய்ஹிந்த்-2, 10என்றதுக்குள்ள என பல படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் ரசிகர்களை கவர்ந்து இழுத்தார். இவர் ரீனா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருக்கும் திருமணமாகி சித்தார்த் என்ற மகனும் உள்ளார்.

இந்நிலையில் ரீனாவிற்கு ஏற்பட்ட புற்றுநோய் காரணமாக கடந்த 2009ஆம் ஆண்டு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து நடிகர் ராகுல் தேவ் வேறு எவரையும் திருமணம் செய்து கொள்ளாமல் தனியாக தன் மகனுடன் இருந்து வந்தார். இந்நிலையில் அவர் நடிகை ஒருவரை காதலித்து வருவதாகவும் விரைவில் அவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொள்ள போவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

அந்த நடிகை வேறு யாரும் இல்லை தனி ஒருவன் திரைப்படத்தில் நடிகர் அரவிந்த்சாமிக்கு ஜோடியாக ஷில்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்த நடிகை முக்தா கோட்சே (வயது 33) தான் என்பது குறிப்பிடத்தக்கது. இதனைப் பற்றி நடிகர் ராகுல் தேவ் இடம் கேட்டபொழுது அவர் , நாங்கள் இருவரும் தற்போது காதலித்து வருகிறோம் . விரைவில் திருமணம் செய்து கொள்ள விருக்கிறோம் என்று கூறியிருக்கிறார்.

மேலும் பேசிய அவர் திருமண விழாவில் பங்கேற்ற பொழுது நாங்களிருவரும் பார்த்துப் பேசினோம் . பின்னர் எங்களுக்குள் நட்பு உருவானது . நாளடைவில் இந்த நட்பானது காதலாக மாறி தற்போது திருமணம் வரை அழைத்துச் சென்றுள்ளது.

எங்கள் இருவருக்கும் இடையில் 14 ஆண்டுகள் வயது வித்தியாசம் இருக்கிறது . ஆனால் உண்மையான காதலுக்கு வயது வித்தியாசம் ஒரு பொருட்டே கிடையாது என்று அவர் கூறியிருக்கிறார். எங்களுடைய இந்த காதல் என்னுடைய முதல் மனைவியின் உறவினர்களுக்கும் நன்றாக தெரியும் என அவர் கூறியிருக்கிறார்.