கர்ப்பிணி யானையை கொலை செய்ய வேண்டும் என பழத்தில் வெடி பொருட்கள் வைக்கப்படவில்லை..! பிரபல நடிகர் சொல்லும் புதிய காரணம்..!

கர்ப்பிணி ஆணையை கொலை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் அன்னாச்சி பழத்தில் வெடிபொருட்கள் வைக்கப்பட மாட்டிருக்காது என்று பிரபல நடிகர் பிரித்திவிராஜ் பகீர் தகவலை வெளியிட்டிருக்கிறார்.


கடந்த சில தினங்களுக்கு முன்பு கேரளாவில் கர்ப்பிணி யானை ஒன்று வெடிபொருள் வைக்கப்பட்டிருந்த அன்னாசிப்பழத்தை உட்கொள்ளும் பொழுது படத்திலிருந்து வெடிமருந்து வெடித்து அதன் வாய் மற்றும் நாக்கு முழுவதும் காயங்கள் ஏற்பட்டு துடிதுடித்து உயிரிழந்தது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இது குறித்து பல நடிகர் நடிகைகளும் தங்களுடைய மனமார்ந்த இரங்கல் செய்தியையும் சமூக வலைதளங்களின் மூலம் தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து விளக்கம் அளிக்கும் விதத்தில் நடிகர் மற்றும் இயக்குனரான பிரிதிவிராஜ் புதிய பதிவு ஒன்றை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார். அவர் வெளியிட்டுள்ள பதிவில் கர்ப்பிணி யானையை கொலை செய்ய வேண்டும் என்ற நோக்கில் அந்த வெடி பொருளை யாரும் வைத்திருக்க மாட்டார்கள். காட்டு விலங்குகளிடமிருந்து மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்வதற்காக பயன்படுத்தும் வழிமுறையாகும். இது சட்டத்திற்கு புறம்பாக இருந்தாலும் இன்றும் நாட்டின் பல இடங்களில் இது நடைமுறையில் இருக்கிறது.

அதுமட்டுமில்லாமல் இந்த சம்பவம் பாலக்காடு மாவட்டத்தில் நடைபெற்று உள்ளது. அனைவரும் கூறுகின்ற மாதிரி இது மலப்புரத்தில் நடைபெறவில்லை. நிச்சயமாக வேண்டும் என்று யாரும் செய்திருக்க மாட்டார்கள். இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்த போலீசார் மற்றும் வனத்துறையினர் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த விசாரணைகள் நடைபெற்று வருகின்றது. வன துறையினர் அடிபட்ட யானையை மீட்டு அதற்கான சிகிச்சையையும் வழங்கினர். இருப்பினும் கர்ப்பிணி யானையை அவர்களால் காப்பாற்ற இயலவில்லை. இவ்வாறு நடிகர் பிரித்திவிராஜ் தன்னுடைய பதிவில் குறிப்பிட்டிருந்தார்.