சின்ன வீடுதான்..! ஆனாலும் மனைவியை ரொம்ப லவ் பண்றேன்! உருகும் நடிகர் சின்னி ஜெயந்த்!

பிரபல காமெடி மற்றும் குணச்சித்திர நடிகர் சின்னி ஜெயந்த் தன்னுடைய குடும்பம் பற்றிய நெகிழ வைக்கும் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.


தன்னுடைய எதார்த்தமான நடிப்பின் மூலமாகவும் ,நகைச்சுவை மற்றும் மிமிக்கிரி திறமையாலும் தமிழ்சினிமாவில் காமெடி மற்றும் குணச்சித்திர நடிகராக வலம் வருபவர் நடிகர் சின்னிஜெயந்த் ஆவார். இவர் இதயம், ராஜா சின்ன ரோஜா, அதிசியபிறவி, காதலர் தினம் போன்ற ஏராளமான திரைப்படங்களில் காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து அன்று எப்படி இருந்தாரோ அதே போல இன்றும் இளமையோடு இருந்து வருகிறார்.

இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தன்னுடைய குடும்பம் பற்றி மனம் திறந்துள்ளார். என்னுடன் பிறந்தவர்கள் 6 பேர். நான்தான் அதில் கடைக்குட்டி. நான் பிறந்து வளர்ந்தது எல்லாமே சென்னை மியூசிக் அகாடமி பின்னாலுள்ள புதுப்பேட்டை தோட்டத் தெருவில் உள்ள எனது வீட்டில் தான். எங்க வீடு மிகவும் சின்னது தான். என்னுடைய அம்மாவிற்கு கர்நாடிக் மியூசிக் நன்றாக தெரியும். என்னுடைய உண்மையான பெயர் சின்ன நாராயணசாமி. நான் தெலுங்கு நன்றாக பேசுவதால் என்னை சின்னி என்று அழைத்தார்கள். திரைப்படத்தில் நடிக்க ஆரம்பித்த பிறகு இயக்குனர் மகேந்திரன் அவர்கள் எனது பெயரை சின்னிஜெயந்த் என்று மாற்றி வைத்தார். 

நடிகர் கார்த்திக்கின் கிழக்கு வாசல் திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போது நான் திருமணம் செய்து கொண்டேன். அரேஞ்ச் மேரேஜ் என்றாலும் நாங்கள் இப்பவும் லவ் பண்ணிக்கிட்டு தான் இருக்கிறோம். எனக்கு 2 மகன்கள் உள்ளார்கள். ஒருவர் பிஎச்டி படித்துக் கொண்டிருப்பதாகவும் மற்றொருவர் ஐடி கம்பனியில் பணிபுரிந்து வருவதாகவும் நடிகர் சின்னிஜெயந்த் தனது குடும்பம் பற்றி மனம் திறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.