2வது குழந்தைக்கு தாயான பிரபல நடிகை..! மகிழ்ச்சியில் முன்னணி நடிகர்!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் ஒருவரான நடிகர் பாபி சிம்ஹாவிற்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது.


தமிழ் சினிமாவில் காதலில் சொதப்புவது என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் பாபி சிம்ஹா. இதனைத் தொடர்ந்து நேரம், ஜிகர்தண்டா போன்ற பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் நெஞ்சங்களைக் கொள்ளை கொண்டார். இவர் நடித்த ஜிகர்தண்டா திரைப்படத்தில் தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதால் தேசிய விருதையும் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. 

நடிகர் பாபி சிம்ஹா தன்னுடன் நடித்த ரேஷ்மி மேனன் என்பவரை காதலித்து வந்தார். இவர்கள் இருவருக்கும் கடந்த 2016-ம் ஆண்டு இரு வீட்டாரின் சம்மதத்தோடு திருமணம் நடைபெற்றது. இந்த அழகான தம்பதியினருக்கு ஏற்கனவே ஒரு பெண் குழந்தை இருக்கும் நிலையில் நேற்றைய தினம் இரண்டாவதாக அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் தாயும் சேயும் நலமுடன் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் நடிகர் பாபி சிம்ஹா மற்றும் ரேஷ்மி தம்பதியினருக்கு அவர்களது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வாழ்த்துகளை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

நடிகர் பாபி சிம்ஹா தற்போது நடிகர் கமல்ஹாசன் நடிக்கும் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் இந்தியன்2 திரைப்படத்தில் பிஸியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.