திருமணத்திற்கு முன்பு 2 பெண்களுடன்..! திருமணத்திற்கு பின்பு? இதுவரை வெளிவராத அஜித்தின் அந்தரங்க வாழ்க்கை!

நடிகர் அஜித் ஷாலினியை காதலித்து திருமணம் செய்து கொள்வதற்கு முன்பாக இரண்டு நடிகைகளை காதலித்து தோல்வியில் முடிந்துள்ளது.


திரையுலகில் அறிமுகம் ஆனது முதலே சாக்லேட் பாயாக அறியப்பட்டவர் அஜித். அப்போது முதலே தான் உண்டு தன் வேலை உண்டு என்கிற போக்கும் அஜித்திடம் காணப்படும். அதே சமயம் அஜித் மிகவும் உணர்வுப்பூர்வமானவர். பள்ளிப்படிப்பை பாதியில் முடித்த அஜித்திற்கு கல்லூரி செல்லும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

இதனால் அவரது பருவ வயது திரையுலகில் தான் தொடங்கியது. வயதில் அனைவருக்கும் ஏற்படும் ஈர்ப்பு அஜித்திற்கும் ஏற்பட்டது. வான்மதி படத்தில் உடன் நடித்த ஸ்வாதியுடன் அஜித்துக்கு நெருக்கம் ஏற்பட்டது. இதன் பிறகு இருவரும் காதல் பறவைகளாக சிறகடித்து பறந்தனர். ஒரு கட்டத்தில் அஜித் - ஸ்வாதி ஜோடி பிரிந்தது.

இதனை தொடர்ந்து 1996ம் ஆண்டு காதல் கோட்டை படத்தில் நடிக்கும் போது நடிகை ஹீராவுடன் அஜித்திற்கு நெருக்கம் ஏற்பட்டது. இருவரும் காதல் வயப்பட்டனர். இந்த காதலை வெளிப்படையாக அப்போது பேட்டியாகவே கொடுத்திருந்தார் அஜித். இதன் பிறகு 1999ம் ஆண்டு தொடரும் திரைப்படத்தில் இணைந்து நடிக்கும் வரை காதல் நீடித்தது.

ஆனால் அந்த காதல் உடனடியாக முறிந்து போனது. இது பற்றியும அஜித் வெளிப்படையாக தெரிவித்திருந்தார். மேலும் ஹீரோ குறித்து அஜித் சர்ச்சைக்குரிய சில தகவல்களையும் வெளியிட்டபது பரபரப்பாக பேசப்பட்டது. இந்த நிலையில் 1999ம் ஆண்டு அமர்க்களம் படத்தில் அஜித்திற்கு ஜோடியாக ஷாலினி நடித்தார்.

ஷாலினியுடனும் அஜித் காதல்வயப்பட்டார். இந்த முறை காதலை கூறிய 3 மாதங்களில் ஷாலினியை திருமணம் செய்து மனைவியாக்கிக் கொண்டார் அஜித். சுமார் 20 வருடங்களாக அஜித் - ஷாலினி திருமண வாழ்க்கை எவ்வித பிரச்சனையும் இன்றி சென்று கொண்டிருக்கிறது. இதற்கு காரணம் திருமணத்திற்கு பிறகு அஜித் எந்த நடிகையையும் ஏறெடுத்து பார்க்காதது தான்.

திருமணத்திற்கு முன்பு 2 பெண்களை காதலித்திருந்தால் திருமணத்திற்கு பிறகு அஜித் இப்போதும் ஜென்டில்மேனாக திகழ்ந்து வருகிறார்.