எனக்கும் ஒரு மகள் இருக்கிறார்! இனி அப்படி செய்ய மாட்டேன்! அஜித் எடுத்த திடீர் முடிவு!

பெண்களை தரக்குறைவாக கிண்டல் செய்யும் கதாபாத்திரங்களில் நடிக்க மாட்டேன் என்று நடிகர் அஜீத் கூறியிருப்பது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


நடிகர் அஜித்குமார் மகளின் பெயர் அனோஷ்கா. இந்த பொங்கலுக்கு வெளியான "விஸ்வாசம்" திரைப்படம் அவருக்கு பெரும் வெற்றியை பெற்றுத்தந்தது. இந்தப்படம் அவருடைய மகளுக்கு மிகவும் பிடித்திருந்தது. இனிமேல் பெண்களை கிண்டல் செய்யும் எந்தவித கதாபாத்திரங்களிலும் நடிக்க கூடாது என்று அனோஷ்கா தன் தந்தையிடம் கூறியுள்ளார்.

நடிகர் அஜித்குமார் நடித்து சமீபத்தில் வெளியான "நேர்க்கொண்ட பார்வை" திரைப்படத்தில் அவர் மாறுபட்ட தோற்றத்தில் நடித்திருந்தாலும், அந்தப்படம் மாபெரும் வசூலை அடைந்தது. இந்தப் படத்திலும் பெண்களை காப்பாற்றும்  கதாபாத்திரத்தில் அஜித்குமார் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தப்படமும் வெற்றி அடைந்ததால் இயக்குநர்களிடம் இனி பெண்களை இழிவுபடுத்தினால் கதாபாத்திரங்களில் தான் நடிக்கப்போவதில்லை என்று கடுமையாக முன்வைத்துள்ளார்.

அஜித் தன்னுடைய அடுத்த திரைப்படத்தை இயக்குநர் ஹெச்.வினோத்தின் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தில் அஜித்குமார் காவல்துறை அதிகாரியாக வலம் வரப்போவதாக கூறப்படுகிறது. வழக்கமாக "சால்ட் அன்ட் பெப்பர்" ஹேர்ஸ்டைலில் வரும் அஜித், இந்த முறை முழுவதும் இளமையாகவே நடிக்க உள்ளதாக கூறப்படுகின்றது. 

இந்த திரைப்படத்திற்காக அஜித்தின் ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர்.