பிரியங்கா கொலையாளி நள்ளிரவு 1 மணிக்கு வீட்டுக்கு சென்று செய்த செயல்! மிரட்சியுடன் விவரிக்கும் தாயார்!

நாட்டையே உலுக்கி வரும் கால்நடை மருத்துவர் கற்பழிப்பு வழக்கின் முக்கிய குற்றவாளி  வீட்டிற்கு சென்ற செய்தியானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தெலங்கானா மாநிலத்தில் கால்நடை மருத்துவர் ஒருவர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு எரிக்கப்பட்ட சம்பவமானது நாடு முழுவதிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தியதில் முகமது பாஷா, ஜோலு சிவா, ஜோலு நவீன் மற்றும் சின்னகேசவலு ஆகிய 4 பேர் குற்றவாளிகளாக கைது செய்யப்பட்டுள்ளனர். 

இதில் முக்கிய குற்றவாளியாக முகமது பாஷாவின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. இந்நிலையில் முகமது பாஷா நள்ளிரவில் தன் வீட்டிற்கு சென்றது குறித்து அவருடைய தாயார் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

"முகமது நள்ளிரவு 1 மணிக்கு வீட்டிற்கு வந்தான். லாரி மோதி விபத்து ஏற்பட்டதால் தாமதமாக வந்ததாக கூறினான். எனக்கும் என்னுடைய கணவருக்கும் அவன் என்ன செய்தான் என்பது முழுவதுமாக தெரியாது. காவல்துறையினர் வந்த அவனை கைது செய்யும்போது கூட எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை. சிக்கியுள்ள மீதி 3 பேரும் முகமது வீட்டில் இருக்கும்போது அடிக்கடி வருவது வழக்கமாக கொண்டிருந்தனர்" என்று முகமதின் தாயார் கூறினார்.

முகமதின் தந்தை கூறுகையில், "என் மகன் மிகவும் சாதாரணமாகவும் நல்லவனாகவே இருந்தான். இந்த குற்றத்தை அவன் செய்திருந்தால் இதுவே அவன் செய்யும் முதல் குற்றச்செயலாகும். இந்த வழக்கில் அவர் மீதான தவறு நிரூபிக்கப்பட்டால் அவனுக்கு நானே தண்டனை கொடுப்பேன்" என்று கூறியுள்ளார்

இந்த சம்பவமானது அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.