பிக்பாஸ் வீட்டில் அடிதடி! நாற்காலியை தூக்கி அபியை அடிக்கப் பாய்ந்த முகைன்! அதிர்ச்சியில் உறைந்த ஹவுஸ்மேட்ஸ்!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் ப்ரோமோ வீடியோக்களில் அபிராமியும் முகினும் நாற்காலியால் அடித்து கொள்வது போன்று அமைந்துள்ளது.


பிக்பாஸ் நிகழ்ச்சியானது சிறப்பான முறையில் நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியின் 2 ப்ரோமோ வீடியோக்கள் வெளியாகியுள்ளன. முதலாவது வீடியோவில் வனிதா அபிராமிக்கு அறிவுரை கூறுவது போன்று அமைந்துள்ளது. அதாவது  வனிதா முகினை பற்றி அபிராமியிடம் பேசி கொண்டிருந்தார். அதாவது, "தில்லான பையனை காதலிப்பது தவறில்லை.

ஆனால் அவன் பின்னாடி நீ சுத்தி அவனை ஹீரோ ஆக்கிட்ட. நீ ஜீரோ ஆயிட்ட. உனக்கு துர்கா பத்தி தெரியுமா" என்று கேள்வி கேட்டு அபிராமியை தூண்டிவிடுவது போன்ற காரியங்களை செய்து கொண்டிருந்தார்.

2-வது வீடியோவில், முகினும் அபிராமியும் சண்டை போட்டுகொள்ள தொடங்கினர். அவர்களுக்கிடையே பலத்த வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது முகின், "நான் நேற்று பார்த்த அபிராமி வேறு; இன்று பார்க்கும் அபிராமி வேறு" என்று கூறினார்.

இது அபிராமிக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. இருவரும் கடுமையான வாய்ச்சண்டையில் ஈடுபட்டனர். பின்னர் இருவரும் நாற்காலியில் அமர்ந்து கொண்டு வாக்கு வாதத்தை தொடங்கினர். இறுதியில் இருவரும் ஆத்திரமடைந்து ஒருவரை நோக்கி ஒருவர் நாற்காலிகள் அடிப்பது போன்ற செய்கை செய்தனர்.ஆகையால் இன்று பிக்பாஸ் வீட்டிற்குள் அடிதடி ரகளை அதிகமாக இருக்கும் என்று ரசிகர்கள் கருதுகின்றனர்.