ஒரே ஓவரில் 5 விக்கெட்! சாதனை படைத்த இந்திய வேகப்பந்துவீச்சாளர்!

சையது முஷ்தாக் அலி தொடரின் அரையிறுதி போட்டியில் கர்நாடகா அணியின் வேகப்பந்துவீச்சாளர் அபிமன்யு மிதுன் ஒரே ஓவரில் 5 விக்கெட்களை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.


பரபரப்பாக நடந்து வரும் சையது முஷ்தாக் அலி தொடரின் அரையிறுதிப் போட்டியில் கர்நாடக மற்றும் அரியானா அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஹரியானா அணி சிறப்பாக விளையாடி ரன்களை குவித்தது. ஆட்டத்தின் 19வது ஓவர் வரை அந்த அணி 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து ரன் குவித்து வந்தனர்.

ஆட்டத்தின் இருபதாவது ஓவரை வீசிய வேகப்பந்துவீச்சாளர் அபிமன்யு மிதுன் அந்த ஓவரின் முதல் 4 பந்தில் 4 விக்கெட்களை வீழ்த்தினார். அதோடு இல்லாமல் அந்த ஓவரின் கடைசி பந்தில் விக்கெட் வீழ்த்தினார். இதனால் அந்த ஓவரில் அபிமன்யு மிதுன் 5 விக்கெட்களை வீழ்த்தி சாதனை படைத்தார். இதனால் ஹரியானா அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 194 ரன்களை எடுத்தது. 

பின்னர் களமிறங்கிய கர்நாடகா அணி 15 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டியது என்பது குறிப்பிடத்தக்கது.