இந்தித் திரையுலகின் சூப்பர் ஸ்டாரான சல்மான்கானின் சகோதரி அர்பிதா கான் பெற்றெடுத்த பெண் குழந்தையின் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.
பிரபல நடிகரை 2வது முறையாக மாமாவாக்கிய அவரது தங்கை..! வெளியான புகைப்படம்..! யார் தெரியுமா?
இந்தி திரையுலகின் முன்னணி நடிகராகவும் சூப்பர் ஸ்டாராகவும் வலம் வருபவர் நடிகர் சல்மான்கான் ஆவார். அவருடைய சகோதரி அர்பிதா கான் கடந்த டிசம்பர் மாதம் 27ஆம் தேதி அழகிய பெண் குழந்தைக்கு தாயானார். அவர் அறுவை சிகிச்சை மூலம் தன்னுடைய சகோதரரான சல்மான் கானின் பிறந்தநாள் அன்று தன் குழந்தையின் பிறப்பை இந்த உலகிற்கு கொண்டு வந்திருக்கிறார்.
தன் மகளின் வருகையை முதல்முறையாக மிகுந்த சந்தோஷத்துடன் புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார் ஆயுஷ் ஷர்மா. மேலும் அந்த அழகிய பெண் குழந்தைக்கு ஆயத் சர்மா என்று பெயரிட்டு உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டிருக்கிறார். மேலும் அந்த புகைப்படங்களுக்கு கேப்ஷனாக, நாங்கள் அழகிய பெண் குழந்தையுடன் ஆசீர்வதிக்கப் பட்டிருக்கிறோம். எங்கள் குழந்தை மீது அன்பு காட்டிய அனைவருக்கும் மிகுந்த நன்றி என்றும் அவர் கூறியிருக்கிறார்.
மேலும் இந்த அழகிய உலகத்திற்கு உன்னை வரவேற்கிறேன் ஆயத் ஷர்மா என்றும், நீ எங்களது வாழ்வில் நிறைய சந்தோஷங்களை பெற்றுத் தந்துள்ளாய் என்றும் பதிவிட்டிருக்கிறார். ஆயுஷ் ஷர்மா வெளியிட்ட புகைப்படங்களில் அவரது மூத்த மகன் அஹில் சர்மாவும் இடம் பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளையில் பாலிவுட் திரையுலகின் சூப்பர் ஸ்டாரான சல்மான்கான் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இந்த அழகிய உலகத்திற்கு உன்னை வரவேற்கிறேன் ஆயத் என்று பதிவிட்டிருக்கிறார். மேலும் தன் பிறந்த நாளன்று மிகச்சிறப்பான பரிசை தனக்கும் தன்னுடைய குடும்பத்திற்கும் அளித்ததற்காக அப்பிரிதாவிற்கும் ஆயுஷ் சர்மாவிற்கும் சல்மான் கான் நன்றி தெரிவித்திருக்கிறார்.