ஆண்மைக் குறைபாடு நீக்கும் சுரைக்காய்

சமையலுக்கு நாம் பயன்படுத்தும் சுரைக்காயை நமது முன்னோர்கள் தண்ணீர் நிரப்பிவைக்கும் பாத்திரமாக பயன்படுத்தினார்கள். ஏனென்றால் இது அத்தனை மருத்துவகுணம் நிரம்பியது.


  • உடலுக்கு குளிர்ச்சியைத் தந்து வெப்பநிலையை சமநிலைப்படுத்தும் தன்மை கொண்டது. உடல் எரிச்சலை நீக்கும் தன்மை உடையது.
  • ஆண்மைக் குறைபாடு உள்ளவர்கள் தினமும் சுரைக்காய் சூப் குடித்துவந்தால் விரைவில் பலன் தெரியும்.
  • சிறுநீர் தொற்றுநோயைத் தணிக்கும். சிறுநீரைப் பெருக்கும். சிறுநீரகத்தில் இருக்கும் கற்களை கரைக்கும் தன்மையும் சுரைக்காய்க்கு உண்டு.
  • சுரைக்காயை அரைத்து மேனியில் பூசி குளித்துவந்தால் உடலுக்கு குளிர்ச்சியும் பளபளப்பும் கிடைக்கும்.