பள்ளியில் மாணவர்களுக்கு கட்டாய ஆதார் எண்! கல்வி அலுவலர்கள் அதிர்ச்சி!

அனைத்து மாணவர்களுக்கும் கட்டாயமாக ஆதார் எண் வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.


தமிழகத்தில் படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் ஆதார் எண்ணை கட்டாயமாக்குவதாக பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. மாணவர்களுக்கு எளிதாக அமைப்பதற்காக கிராமப்புறங்களின் சேவை மையங்களில் ஆதார் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.

பள்ளி நேரங்களில் மாணவர்களை அழைத்து சென்று சேவை மையத்தில் ஆதார் எண்ணை பதிவு செய்துக்கொள்ள வேண்டும். புதிதாக ஆதார் எண்ணை பதிவு செய்வதற்கும், ஏற்கனவே பதிவு செய்த ஆதார் எண்ணை கணினியில் பதிவேற்றம் செய்வதற்கு மாணவர்களிடமிருந்து எந்தவித கட்டணத் தொகை பெறக்கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது.

முகவரி மாற்றத்திற்கு மட்டும் மாணவர்களிடமிருந்து 50 ரூபாய் பெற்றுக்கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. 5 மற்றும் 15 வயது முடிவுற்ற மாணவர்களின் கைரேகைகள், கருவிழிகள், முதலியவற்றை ரெக்கார்ட் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த முறையினை மேற்பார்வையிடுவதற்காக கிராமப்புறங்களில் ஆதார் மேற்பார்வை குழு அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து மாணவர்களுக்கும் ஆதார் பதிவை கட்டாயமாக்க வேண்டும் என்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

இந்த சம்பவமானது தமிழகத்தின் பள்ளிகளில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.