இந்துக்களின் மனசை புண்படுத்திட்டீங்க! ஜோதிகா கழுத்தை பிடித்து வெளியே தள்ளிய சக்தி மசாலா..!

தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயத்தை பற்றி நடிகை ஜோதிகா கூறிய சர்ச்சைக்குரிய கருத்துக்களால் நடிகை ஜோதிகா உடனான 2020-2021 க்கான விளம்பர ஒப்பந்தம் ரத்து செய்யப்படும் என சக்தி மசாலா நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.


சமீபத்தில் நடந்த விருது வழங்கும் விழாவில் பங்கேற்ற நடிகை ஜோதிகா தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயத்தை பற்றி சர்ச்சைக்குரிய கருத்துக்களை பகிர்ந்து கொண்டார் என்று கூறி சமூக வலைதள பக்கங்களில் அவருக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். நடிகை ஜோதிகா அந்த விழா மேடையில், தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயம் மிகவும் அழகானது. அதை மிக அழகாக அரண்மனைகளை போல் பாதுகாத்து வருகிறார்கள். நான் அதை பார்த்துள்ளேன் என்று கூறினார். என்னுடைய அடுத்த நாள் படப்பிடிப்பு தஞ்சையில் அமைந்துள்ள மருத்துவமனையில் நடைபெற்றது. 

அந்த மருத்துவமனையில் நான் கண்டது என் வாயால் சொல்ல முடியாது. அந்தளவிற்கு பராமரிக்கப்படாமல் அங்குள்ளவர்கள் அவதிப்படுவதை என் கண்களால் பார்க்க முடிந்தது. கோயிலுக்காக அனைவரும் பணம் கொடுக்கிறீர்கள் அதேபோன்று மருத்துவமனைகளையும் கல்வி நிலையங்களையும் பராமரிப்பதற்கு தேவையான தொகையையும் அளியுங்கள். கோயில்களை விட மருத்துவமனைகளும் பள்ளிக்கூடங்களும் தான் மிகவும் முக்கியம் என அவர் கூறியிருந்தார்.

 

நடிகை ஜோதிகா கூறிய இந்த கருத்து மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. கடந்த சில நாட்களாகவே நடிகை ஜோதிகாவின் இந்த கருத்து சமூக வலைத்தளத்தில் பரவி பலரது விமர்சனங்களுக்கு ஆளாகியுள்ளது. ஒரு சிலர் நடிகை ஜோதிகாவின் இந்த பேச்சுக்கு தங்களுடைய கடும் எதிர்ப்புகளையும், கண்டனங்களையும் சமூக வலைதளப் பக்கங்கள் மூலம் பதிவிட்ட வண்ணம் உள்ளனர். 

 நடிகை ஜோதிகா சக்தி மசாலா வின் விளம்பரத்தில் நடித்து வருகிறார் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான். அவரது நடிப்பில் வெளியான சக்தி மசாலா விளம்பரம் ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. ஆனால் நடிகை ஜோதிகாவின் சர்ச்சைக்குரிய கருத்துக்களை அடுத்து, அவருடனான 2020-2021 க்கான விளம்பர ஒப்பந்தம் ரத்து செய்யப்படும் என சக்தி மசாலா நிறுவனம் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. மேலும் நடிகை ஜோதிகாவின் இந்த கருத்து இந்துக்களின் உணர்வை புண்படுத்தும் விதமாக உள்ளதாகவும் அந்நிறுவனம் கூறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த செய்தியானது சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.