ரூ.30 லட்சத்துடன் ATM எந்திரத்தையே ஆட்டைய போட்ட பலே கொள்ளையர்கள்! எப்படி தெரியுமா?

மகாராஷ்டிர மாநிலம் பூனே அருகே 30 லட்சம் ரூபாயுடன் ஏ.டி.எம். எந்திரத்தை கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.


பூனேவை அடுத்த யெவத் என்ற இடத்தில் காலையில் கண் விழித்த மக்களுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. அவர்களது பகுதியில் இருந்த எஸ்.பி.ஐ. வங்கி ஏ.டி.எம். மையத்தில் பணத்தோடு  ஏ.டி.எம். இயந்திரம் கொள்ளையடிக்கப்பட்டது.

இது தொடர்பான புகாரின் பேரில் போலீசார் ஏ.டி.எம்.மையத்தில் உள்ள சி.சி.டி.வி. கேமராவை ஆய்வு செய்த போது காட்சிகள் பதிவாகாத வகையில் கேமரா மீது கொள்ளையர்கள் ஸ்பிரே அடித்தது தெரிய வந்தது. 

இதற்கிடையில்,  அந்த பகுதியில் கிடைத்த  சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில் ஸ்கார்ப்பியோ காரில் ஹெல்மெட்டால் முகத்தை மூடியபடி  மர்ம நபர்கள் சிலர், ஏ.டி.எம். மில் இருந்த பணத்துடன் சேர்த்து ஏ.டி.எம் மெஷினையே தாங்கள் வந்த  ஸ்கார்ப்பியோ காரின் பின் வலுவான கயிற்றால் க்ட்டி இழுத்து காரை இயக்குவதன்   மூலமாக  ஏ.டி.எம். எந்திரத்தை பெயர்த்து எடுத்து காரில் ஏற்றிக்கொண்டு தப்பியோடியதும் தெரிய வந்தது. 

வங்கி ஊழியர்கள் அளித்த தகவலின் படி கொள்ளை நடந்த நேரத்தில் அந்த ஏ.டி.எம். எந்திரத்தில் 30 லட்சம் ரூபாய் இருந்தது தெரியவந்தது. சி.சி.டி.வி. காட்சிகளின் அடிப்படையில் கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.