எடப்பாடி பழனிசாமியிடம் சரண்டரான ஆ.ராசா... மன்னிப்பு கேட்டு கெஞ்சல்

பரபரப்புக்காக எதையாவது பேசி, அதன் மூலம் சர்ச்சையைக் கிளப்புவதுதான் தி.மு.க.வின் பழக்கம். அந்த வகையில்தான் முதல்வரை பற்றியும் அவரது தாயாரை பற்றியும் பேசி இருந்தார் ஆ.ராசா.


அந்த வீடியோ வெளியானதும் தமிழகம் முழுவதும் கடுமையான எதிர்ப்புகள் எழுந்தன. அ.தி.மு.க. மட்டுமின்றி அதன் கூட்டணிக் கட்சிகளும் பொங்கியெழுந்தன. இது தவிர, தி.மு.க.வில் சிலரும்கூட எதிர்ப்பு தெரிவித்தனர்.

தமிழகம் எங்கும் ஆ.ராசாவின் உருவப் பொம்மைகள் எரிக்கப்பட்ட நிலையிலும், அது வெட்டி ஒட்டப்பட்ட வீடியோ அதனால் நான் மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று அடம் பிடித்துவந்தார் ஆ.ராசா.

அவருக்கு எதிராக தமிழகம் முழுவதும் கடுமையாக பேசப்பட்டதுடன், தி.மு.க. ஆட்சியில் பெண்களுக்கு மதிப்பும், மரியாதையும் கிடைக்காது என்றும் பேசப்பட்டது. இதையடுத்து, தி.மு.க.வின் தேர்தல் பிரசாரமே பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டது. 

அதனால் மிரண்டுபோன ஸ்டாலின் ஆ.ராசாவுக்கு அழுத்தம் கொடுத்ததாக சொல்லப்படுகிறது. இதையடுத்து இன்று எடப்பாடி பழனிசாமியிடம் மன்னிப்பு கேட்டிருக்கிறார். இதை முதலிலேயே செய்திருந்தால் இத்தனை தூரம் பிரச்னை போயிருக்காதே...