காலேஜ் பீஸ் அனைத்தும் மாணவர்களிடமே திருப்பி வழங்கப்படும்..! 14 லட்சம் பெற்றோர் வயிற்றில் பால் வார்த்த ஜெகன் ரெட்டி..!

ஊரடங்கு உத்தரவுக்கு மத்தியில், ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி மாணவர்களுக்கு முழு கட்டண திருப்பிச் செலுத்துவதற்காக " ஜகன்னண்ணா வித்யா தீவேனா" என்ற திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார்.


ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தொடர்ந்து பல நல்ல திட்டங்களை தன்னுடைய மாநில மக்களுக்கு செயல்படுத்தி வருகிறார். ஊரடங்கு உத்தரவு நிலவி வரும் நிலையில் ஜெகன்மோகன் ரெட்டி கடந்த செவ்வாய்க்கிழமை அன்று வீடியோ கான்பரன்சிங் மூலம் மாணவர்களுடன் உரையாடினார். அப்போது பேசிய அவர் மாநிலம் முழுவதும் உள்ள மாணவர்களுக்கு அவர்களுடைய கட்டணத்தை திருப்பி செலுத்தும் வகையில் "ஜகன்னண்ணா வித்யா தீவேனா" என்ற திட்டத்தை தொடங்கி வைத்திருக்கிறார். இந்த திட்டத்தின் கீழ் ஒவ்வொரு ஆண்டும் கட்டண தொகையானது நான்கு தவணைகளில் திருப்பி செலுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் அந்த தொகையானது மாணவ மாணவிகளின் தாயாரின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் எனவும் ஜெகன்மோகன் ரெட்டி அந்த அறிவிப்பில் கூறியிருக்கிறார். இதுவரை ரூபாய் 1880 கோடி நிலுவையில் இருக்கும் சூழ்நிலையில், ரூபாய் 4000 கோடி மாணவர்களின் தாயாரின் வங்கிக் கணக்கில் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. 2019-20 கல்வியாண்டிற்கான கல்லூரிக் கட்டணத்தை செலுத்திய மாணவர்களின் பெட்ரோற் நேரடியாக கல்லூரி நிர்வாகிகளை அணுகி தங்களது தொகையை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார்.

ஒருவேளை கல்லூரி நிர்வாகம் தங்கள் குழந்தைகளுக்கு தரமான கல்வியையோ அல்லது சிறந்த வசதிகளையோ 

வழங்க தவறிவிட்டால், மாணவர்களின் பெற்றோர்கள் 1902 என்ற ஹெல்ப்லைன் என்னை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என முதல்வர் கூறியிருக்கிறார். இந்தத் திட்டத்தின் மூலமாக மாநிலம் முழுவதும் உள்ள 14 லட்சம் மாணவர்களுக்கு நிதி வழங்க திட்டமிட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி கூறி இருக்கிறார். மேலும் பேசிய அவர், மாநில அரசு எப்போதும் கல்வி மற்றும் ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை அளிக்கும் என்றும், எந்த குடும்பமும் கடன் வலையில் சிக்காது என்றும் உறுதியளித்தார். 

தாழ்த்தப்பட்ட குடும்பங்களின் லட்சக்கணக்கான மாணவர்களுக்கு நாங்கள் வழங்கக்கூடிய ஒரே சொத்து கல்வி. ஒவ்வொரு குடும்பத்திலிருந்தும் ஒரு மாணவர் தங்கள் தொழில் கல்வியை முடித்து ஒரு நல்ல வேலையைப் பெற்றால், குடும்ப உறுப்பினர்களின் வாழ்க்கை சிறந்த நிலையில் இருக்கும் அமையும் என முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஜெகன்மோகன் ரெட்டியின் இந்த அறிவிப்பு பல பெற்றோர்களின் வயிற்றில் பால் வார்த்துள்ளதாக கூறப்படுகிறது.