நீட் தேர்வுக்கு ஆதரவாக வாதாடியவரின் மகனுக்கு வாக்கு கேட்கிறார் ஸ்டாலின்! சிவகங்கையில் அடிச்சி தூக்கிய டிடிவி!

சிவகங்கை அரண்மனை வாசலில் அம்மா மக்கள் முன்னேற்ம் கழகம் சார்பில் சிவகங்கை நாடளுமன்ற வேட்பாளர் தேர்போகி பாண்டி ஆதரித்து TTV பிரச்சாரம் செய்தார்.


அப்போது அவர் பேசியதாவது, சீனா தானா மனைவி.ப.(சிதம்பரம் மனைவி) நீட்தேர்வுக்கு ஆதரவாக வாதாடினார் இனறு அவர் மகனுக்கு வாக்குகேட்கிறார் மு.க.ஸ்டாலின்.  தமிழகத்தில் பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், சிவகங்கை அமைச்சர் பாஸ்கரன் உட்பட 33 எட்டப்பர்கள் உள்ளனர்.

ஆர்கே.நகர் ஜனநாயக போரில் 33 பேரையும் ஓட, ஓட விரட்டினோம். தற்போது அதிமுக பொதுச் செயலாளர் மோடி தான். நான்காவது கூட படிக்காதவர்கள் மோடியை டாடி, டாடி என்று அழைக்கின்றனர். அவர்களுக்கு டாடி என்றாலே அர்த்தம் தெரியாது. ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ்  தெலுங்குப்பட மந்திரவாதி மாதிரி கை முழுவதும் கயிறுகள் கட்டியுள்ளனர்.

அதுவே அவர்களுக்க தூக்கு கயிறாக மாறப்போகுது. அம்மாவின் ஆட்சி நடப்பதாக கூறுகின்றனர். ஆனால் அது எடப்பாடி அம்மாவின் ஆட்சி தான் நடக்கிறது. 4 அடி உயரமுள்ள தம்பி, குட்கா தம்பி (விஜயபாஸ்கர்) வீட்டில் ஒரு பேப்பரை எடுத்து, அதன் மூலம் ஆர்கே.நகர் தேர்தலை நிறுத்தினர்.

ஆனால் துரைமுருகன் வீட்டில் ரூ.33 கோடி எடுத்தும் தேர்தலை நிறுத்தலை. அதற்கு காரணம் அன்டர் ஸ்டான்டிங் தான். அது என்ன அன்டர்ஸ்டான்ங் என்றால் தேர்தலுக்கு பிறகு திமுக பாஜகவை ஆதரிக்கும். ஸ்டாலின் தலையை பாஜகவிற்கும் வாலை காங்கிரசுக்கும் காட்டும் மீன். இவ்வாறு தினகரன் பேசினார்.