தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், விவிஐபி ஒருவரின் பலான வீடியோவை ரிலீஸ் செய்யப் போவதாக, வெற்றிவேல் தெரிவித்துள்ளார்.
கதிர்காமுவின் ஆபாச வீடியோ ரிலீஸ் எதிரொலி! அதிமுக விவிஐபியின் ஆபாச வீடியோ விரைவில் வெளியாகிறது!

டிடிவி தினகரன் அணியை சேர்ந்தவர் வெற்றிவேல். இவர் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏ.,க்களில் ஓருவர் ஆவார். இவர், ஆர்கே நகர் இடைத்தேர்தலின்போது, திடீரென மறைந்த முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெறும் வீடியோவை ரிலீஸ் செய்தார். இது பல தரப்பிலும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், அமமுக வேட்பாளர்களை குறிவைத்து, ஆளுங்கட்சியின் பேரில், பலவித ஆபாச வீடியோக்கள் புதிது புதியதாக ரிலீஸ் செய்யப்பட்டு வருகிறது. இந்த நெருக்கடியை சமாளிக்க, அமமுக சார்பாக, வெற்றிவேல் தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது. இதன்பேரில், ஆளுங்கட்சியை சேர்ந்த முக்கியமான விவிஐபி ஒருவரின் பலான வீடியோ வெற்றிவேல் வசம் சிக்கியுள்ளதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனை அவர் இன்னும் ஓரிரு நாட்களில் வெளியிடுவார் எனக் கூறப்படுவதால், ஆளுங்கட்சி வட்டாரம் பீதி அடைந்துள்ளது. இப்படி மாறி மாறி ஒவ்வொருவரும் ஆபாச வீடியோ வெளியிட தொடங்கியுள்ளதால், தமிழக தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.