தேர்தலுக்கு அ.தி.மு.க. ரெடி..! முதல்வர் எடப்பாடியாரும் துணை முதல்வர் பன்னீரும் வெளியிட்ட மண்டலப் பொறுப்பாளர் பட்டியல்..!

இப்படை தோற்கின் எப்படை வெல்லும் எனும் ரீதியில், சட்டமன்றத் தேர்தலை சந்திப்பதற்கு அ.தி.மு.க. தயாராகிவிட்டது. அந்த வகையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தேர்தலுக்காக புதிய குழுக்களை அறிவித்துளனர்


அமைச்சா்கள் செங்கோட்டையன், சி.வி.சண்முகம், ஓ.எஸ்.மணியன், முன்னாள் அமைச்சா்கள் சி. பொன்னையன், நத்தம் இரா.விசுவநாதன், செ.செம்மலை, கோகுல இந்திரா, துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், முன்னாள் எம்எல்ஏ ஜே.சி.டி பிரபாகா், முன்னாள் எம்.பி.க்கள் அ.அன்வர்ராஜா, பி.வேணுகோபால் ஆகியோர் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

தேர்தல் பணிகளையும், கட்சிப் பணிகளையும் விரைவு படுத்தும் வகையில் பல்வேறு மாவட்டங்களுக்கு மண்டலப் பொறுப்பாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, கிருஷ்ணகிரி, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு கே.பி.முனுசாமி, தஞ்சாவூர், திருச்சி, பெரம்பலுர் மாவட்டங்களுக்கு வைத்திலிங்கம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். சேலம் மாவட்டத்துக்கு பொன்னையன், ராணிப்பேட்டை தம்பிதுரை, திண்டுக்கல் மேற்கு மாவட்டத்துக்கு திண்டுக்கல் சீனிவாசன், ஈரோடு புறநகர், தென் சென்னை வட மேற்கு, தென் மேற்கு மாவட்டங்களுக்கு செங்கோட்டையன், கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களுக்கு எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மொத்தம் 30 மண்டலப் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இனிமேல் அ.தி.மு.க.வின் வேகம் படு சூடாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.