அதிமுக ஒற்றுமையுடன் ஆரோக்கிய நிலையில் இருக்கிறது! அமைச்சர் உதயகுமார். எதிர்க் கட்சிகளுக்கு பதில்!

சென்னையில் நடைபெற்ற அ.தி.மு.க. ஆலோசனைக் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கும் முட்டல், மோதல் என்று எதிர்க் கட்சிகள் வளர்த்துவிடும் வம்பு, வழக்குகளுக்கு சவால் விடும் வகையில் பேசியிருக்கிறார் அமைச்சர் உதயகுமார்.


இன்று அவர் பேசுகையில், "அதிமுக ஒற்றுமையுடன் இருக்கிறது. ஆரோக்கிய நிலையை உருவாக்கவே ஆலோசனைக் கூட்டம் நடந்தது; அ.தி.மு.க. எப்போதும் போன்று ராணுவ கட்டுப்பாட்டுடன் இருக்கிறது. 

முதல்வரும், துணை முதல்வரும் ராமர்- லட்சுமணன் போல ஒற்றுமையாக உள்ளனர். முதல்வர் வேட்பாளர் குறித்து பேசக்கூடாது என அதிமுக தலைமை அறிவுறுத்தியுள்ள காரணத்தால் இப்போது அது பற்றி பேச வேண்டிய அவசியம் இல்லை’’ என்றார்.

கூட்டணிக் கட்சிகளின் பேச்சு குறித்து கேட்டபோது, ‘கூட்டணிக் கட்சி என்றாலும் அவரவர் கருத்தை சொல்ல எந்த தடையும் இல்லை" என்றார்.