பாஜக, தேமுதிக, பாமகவுடன் ரகசிய பேச்சுவார்த்தை! உண்மையை போட்டு உடைத்த அதிமுக!

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் அறிவுறுத்துதல் படி கூட்டணி குறித்து ரகசிய பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது என துணை ஒருங்கிணைப்பாளர் வைத்தியலிங்கம் பேட்டி.


அதிமுக தலைமை அலுவலகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான விருப்ப மனு வழங்கப்பட்டு வருகிறது நாளையுடன் விருப்ப மனு வழங்கும் நாள் முடிவடைய உள்ள நிலையில் 39தொகுதிகளுக்கும் பலர் போட்டியிட விருப்பம் தெரிவித்து வருகின்றனர். இதன் ஒருபகுதியாக துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே. பி. முனுசாமி, நத்தம் விஸ்வயாதன், வைத்தியலிங்கம் உள்ளிட்டோர் விருப்பமனுக்கள் பரிசீலனை செய்து வருகின்றனர்.

இதன் பின் செய்தியாளர்களை சந்தித்த துணை ஒருங்கிணைப்பாளர் வைத்தியலிங்கம் பேசியதாவது:

ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் அறிவுறுத்தல் படி பாஜக, தேமுதிக, பாமக உள்ளிட்ட பல கட்சிகளுடன் உடன் ரகசிய பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது.

இன்னும் தேர்தலுக்கு தேதியே அறிவிக்கப்படவில்லை. விரைவில் கூட்டணி குறித்து அறிவிப்பு வரும் என தெரிவித்தார்.

மேலும் அதிக சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு இருப்பதால் இரட்டை இலை சின்னம்  எங்களுக்கு தான் கிடைக்கும்.

கூட்டணி குறித்து தலைமை எடுக்கும் முடிவு தான் எங்கள் முடிவு என கூறினார்.