அதிமுகவில் ஓரங்கட்டப்படும் செங்கோட்டையன்..! குழி பறிப்பாரா? திசை மாறுவாரா?

ஜெயலலிதா தேர்தல் பிரசாரம் செய்ய முன்வந்தால், அவருக்கு முன்னே சென்று அனைத்து ஏற்பாடுகளையும் செய்பவர் செங்கோட்டையன்.


தேர்தல் பிரசார ரூட் வடிவமைப்பதில் கில்லாடி என்று ஜெயலலிதாவிடம் பெயர் வாங்கியவர். ஆனால், அவரை தேர்தல் விவகாரங்களில் சேர்க்கவே வேண்டாம் என்று அ.தி.மு.க. மேலிடம் ஓரம் கட்டிவிட்டதாம்.

அதனால்தான் பிரதமர் நிகழ்ச்சி உள்ளிட்ட எதிலும் அவரை காணவே முடியவில்லை என்கிறார்கள். 

பா.ம.க.வுடன் கூட்டணிக் கையெழுத்து ஆன நேரத்திலும், பா.ஜ.க.வுடன் கூட்டணிக் கையெழுத்து போடப்பட்ட நேரத்திலும் செங்கோட்டையனைக் காணவில்லை. தே.மு.தி.க. சார்பில் விஜயகாந்த் கையெழுத்துப் போட வந்த நேரத்திலும் செங்கோட்டையன் இல்லை. 

தற்போது அரசு நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்வதில்லை. அதனால்தான் பள்ளிக் கல்வித்துறை ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் மற்ற அமைச்சர்கள் யாருமே கலந்துகொள்ளவில்லை என்கிறார்கள். 

தேர்தல் நேரத்தில் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டிருப்பதாக உணரும் செங்கோட்டையன், இந்தத் தேர்தலில் என்ன செய்யப் போகிறார் என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி. உள்ளேயே இருந்து எடப்பாடிக்கு குழி பறிப்பாரா அல்லது தினகரன் கட்சிக்கு திசை மாறுவாரா என்பது விரைவில் தெரிந்துவிடும்.