கொங்கு மண்டலத்தை சேர்ந்த அ.ம.மு.க நிர்வாகிகள் பலரை இன்று ஒரே நாளில் தி.மு.கவில் ஐக்கியமாக்கியுள்ளார் செந்தில் பாலாஜி.
கொங்கு மண்டலத்தில் காலியாகும் அமமுக! நிர்வாகிகளை கொத்து கொத்தாக அள்ளிச் செல்லும் செந்தில் பாலாஜி!
இது தொடர்பாக தி.மு.க தலைமை கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், மு.க.ஸ்டாலின் முன்னிலையில் டி.டி.வி.தினகரனின் அ.ம.மு.க. கட்சியைச் சேர்ந்த ஈரோடு மாநகர் மாவட்டச் செயலாளர் பருவாச்சி எஸ்.பரணீதரன், மாநில மாணவர் அணி இணைச் செயலாளர் ஈரோடு எம்.பிரபு, ஈரோடு நகரச் செயலாளர் மற்றும் அ.ம.மு.க மாவட்ட அணிகளின்ச் செயலாளர்கள் தி.மு.க.வில் இணைந்தனர்.
மதுரையில் இன்று (15-2-2019) காலை, டி.டி.வி.தினகரனின் அ.ம.மு.க.கட்சியின் ஈரோடு மாநகர் மாவட்டச் செயலாளர் பருவாச்சி எஸ்.பரணீதரன் மற்றும் அ.ம.மு.க. கட்சியின் மாநில மாணவர் அணி இணைச் செயலாளர் ஈரோடு எம்.பிரபு ஆகியோர் தலைமையில்; அ.ம.மு.க. கட்சியின் பவானி நகரத்தைச் சேர்ந்த நகரச் செயலாளர் வாணி கே.குமரன், ஆகியோர் இணைந்தனர்.
ஈரோடு நகர இணைச் செயலாளர் எம்.பாக்கியராஜ் - நகர இளைஞர் அணிச் செயலாளர் எம்.அருண்குமார் - நகர எம்.ஜி.ஆர். பேரவைச் செயலாளர் பி.பாலமுருகன், ஈரோடு மாநகர் மாவட்ட அணிகளைச் சேர்ந்த மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணிச் செயலாளர் எம். சிவகுமார் - மாவட்ட மாணவர் அணிச் செயலாளர் எஸ். செல்வக்குமார் - மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் ஆர்.கார்த்திக் - மாவட்ட வர்த்தக அணிச் செயலாளர் ஜே.சந்தோஷ் டோமினிக் - மாவட்ட புரட்சித்தலைவி அம்மா பேரவை இணைச் செயலாளர் என்.ராமச்சந்திரன் - மாவட்ட புரட்சித்தலைவி அம்மா பேரவை துணைத் தலைவர் என்.தனசேகர் -
மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணித் தலைவர் ஈ.அரவிந்முருகன் - மாவட்ட மாணவர் அணி தலைவர் எம்.டென்சன் - மாவட்ட அண்ணா தொழிற்சங்க துணைத் தலைவர் எம்.முத்துகிருஷ்ணன் - மாவட்ட மாணவர் அணி துணைச் செயலாளர்கள் அருண்குமார், சசிகுமார் - மாவட்ட இளைஞர் பாசறை துணைச் செயலாளர் கே.ரமேஷ் - மாவட்ட இளைஞர் பாசறை துணைச் செயலாளர் கோட்டை கார்த்தி - மாவட்ட பேரவைத் தலைவர் அழகேசன் - மாவட்ட சிறுபான்மை பிரிவு துணைச் செயலாளர் மில்டன் ஆகியோர் தி.மு.க.வில் இணைந்தனர்.
இந்த நிகழ்வின் போது தி.மு.க துணைப் பொதுச்செயலாளர் இ.பெரியசாமி, எம்.எல்.ஏ., கரூர் மாவட்ட பொறுப்பாளர் வி.செந்தில்பாலாஜி ஆகியோர் உடனிருந்தனர். கொங்கு மண்டலத்தில் பலவீனமாக உள்ள தி.மு.கவிற்கு பலம் சேர்க்கும் வகையில் செந்தில் பாலாஜி தனது ஆதரவாளர்களை சிறுக சிறுக தி.மு.கவில் சேர்த்து வருகிறார்.
அதே சமயம் அ.ம.மு.கவின் முக்கிய நிர்வாகிகள் ஒவ்வொருவராக கடையை காலி செய்வது தினகரன் தரப்புக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. செந்தில் பாலாஜி செல்லும் போது அதனால் பாதிப்பு இல்லை என்று தினகரன் கூறினார். இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் தான் தற்போது அ.ம.மு.கவை உடைக்கும் வேலையில் செந்தில் பாலாஜி ஈடுபட்டுள்ளாராம்.