குடும்ப ஆட்சியை வரவிட மாட்டோம். புரட்சித்தலைவர் நினைவுநாளில் அ.தி.மு.க. உறுதிமொழி

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நிறுவனத் தலைவரும், தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சரும், தமிழ் மக்களின் நெஞ்சமெல்லாம் நிறைந்தவருமான, மக்கள் திலகம் புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்களின், 33-ஆவது ஆண்டு நினைவு நாளில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் உறுதிமொழி எடுக்கப்பட்டது.


• ‘அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்’ ஏழைகளைக் காக்கின்ற இரும்புக் கோட்டை. இந்த மாபெரும் மக்கள் இயக்கத்தை, நமக்குத் தந்த புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்களின் புகழை எந்நாளும் காப்போம்... காப்போம்... என உளமாற உறுதி ஏற்கிறோம்... உறுதி ஏற்கிறோம்... 

• புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள், இந்தத் தமிழ் மண்ணையும், தமிழ் மொழியையும் உயிராக நினைத்தார்; தமிழர்களின் உள்ளத்தில் நிறைந்தார். mtuJ நினைவுகளை இதயத்தில் வைத்து, கழகப் பணி ஆற்றுவோம்... என உளமாற உறுதி ஏற்கிறோம்... உறுதி ஏற்கிறோம்...

• ஊழலை ஒழித்திட்ட தர்ம தேவன்; பசிப்பிணி தீர்த்து வைத்த வள்ளல்; பார் புகழ நாடாண்ட இதய தெய்வம், பொன்மனச் செம்மல், புரட்சித் தலைவர் வழி நடப்போம்... என, உறுதி ஏற்கிறோம்... 

• தமிழ் நாட்டில் ஒரு குடும்ப ஆட்சி இருக்கக்கூடாது என்று, ஜனநாயகம் காப்பாற்றப்பட, புதிய எழுச்சி தந்தவர், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்.. அவர் உருவாக்கிய உண்மையான ஜனநாயகத்தைக் காப்போம்... என்று உறுதி ஏற்கிறோம்... உறுதி ஏற்கிறோம்...

• மக்களின் வாழ்வு வளம்பெற, வசனத்திலே புரட்சி... நடிப்பிலே புரட்சி... அரசியலில் புரட்சி என்று புரட்சியின் வடிவமானார் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்..

• அவர் காட்டிய புரட்சி வழியை நாமும் தொடர்வோம்... மக்களுக்கு தொண்டாற்றுவோம் என்று உறுதி ஏற்கிறோம்... உறுதி ஏற்கிறோம்...

• ஏழை எளியோருக்காக திட்டங்கள்; சமுதாயத்தில் பின்தங்கி இருக்கும் மக்களுக்காக திட்டங்கள்; பெண்கள் தலைநிமிர்ந்து வாழ்வதற்காக திட்டங்கள்; உழைக்கும் தொழிலாளர்களுக்காகத் திட்டங்கள்; விவசாயிகளுக்காக விதவிதமான திட்டங்கள்; நெசவாளர்களுக்காக திட்டங்கள்; மீனவ பெருமக்களுக்காக திட்டங்கள்; மாணாக்கர்களுக்காக திட்டங்கள் என்று, திட்டங்கள் போட்டவர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள். அந்தத் திட்டங்கள் வேண்டும்; அதை நிறைவேற்ற மாண்புமிகு அம்மாவின் ஆட்சியும் வேண்டும். அதற்கென உழைப்போம்... உழைப்போம்... என்று உறுதி ஏற்கிறோம், என்று உறுதி ஏற்கிறோம்.

• தீய சக்திகளை அழித்துக் காட்டியவர்கள், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா; கண்ணுக்கெட்டிய தூரம் வரை, நமக்கு எதிரிகளே இல்லை. அதை செய்து காட்டியவர் அம்மா. புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் பொற்கால ஆட்சியை நிலைக்கச் செய்தவர் அம்மா. bfho பிடிக்கும் தொண்டனையும், கோட்டைக்கு அனுப்பியவர்கள், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா. நம் இருபெரும் தலைவர்கள் நிகழ்த்திய சாதனைகளை எல்லாம், தொடர்ந்து நாமும் செய்வோம். இதில் ஒருபோதும் தவற மாட்டோம்... தவற மாட்டோம்... என்று, உறுதி ஏற்கிறோம்... உறுதி ஏற்கிறோம்... 

பாரத் ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்களின் பொற்கால ஆட்சி; தொடர்ந்து புரட்சித் தலைவி அம்மா அவர்களின் நல்லாட்சி; விசுவாசத் தொண்டர்களின் நேர்மையான ஆட்சி; மக்கள்தான் எஜமானர்கள் என்று நினைக்கும் அம்மாவின் ஆட்சி, மீண்டும் மலர... ஒற்றுமையுடன் cskhu பாடுபடுவோம், cskhu பாடுபடுவோம். நாம் அனைவரும் ஒருதாய் மக்கள் என்ற உணர்வோடு பாடுபடுவோம் என்று உற்தி எடுத்தனர்,