ஜெயலலிதாவை மறந்த ஓ.பி.எஸ்! கண்டுகொள்ளாத எடப்பாடி! என்ன செய்யப்போகிறது ஜெ. ஆவி?

நாடாளுமன்ற வேட்பாளர் பட்டியல் வெளியிடுவது தொடங்கி, தேர்தல் அறிக்கை வெளியிடுவது வரை ஸ்டாலின் பக்காவாக செய்து முடித்துவிட்டார்.


ஸ்டாலின்  கருணாநிதி சமாதிக்குச் சென்று ஆசி பெற்று வந்தார், வீட்டிலும் கருணாநிதி படத்துக்கு முன்பு பட்டியலை வைத்து ஆசிர்வாதம் பெற்றார். இதன் பிறகே வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார். தேர்தல் அறிக்கையை வாசித்தார்.

ஆனால், அம்மாவின் வழியில் ஆட்சி நடத்துகிறோம் என்று வார்த்தைக்கு வார்த்தை பேசிக்கொண்டு இருக்கும் அ.தி.மு.க. இதுவரை ஜெயலலிதா சமாதிக்கு ஒரு முறைகூட போகவில்லை. அதுமட்டுமின்றி, ஜெயலலிதா புகைப்படத்துக்கு முன்பு வைத்து ஆசிர்வாதம்கூட பெறவில்லை.

இப்படி ஜெயலலிதாவை மறந்துவிட்ட பன்னீரும் எடப்பாடியும் ஜெயிக்கவே கூடாது என்று அ.தி.மு.க. தொண்டர்கள் இப்போது டென்ஷாகி வருகிறார்கள். அதுமட்டுமல்ல, ஜெயலலிதாவுக்குப் பிடிக்காத பா.ம.க.வுடன் கூட்டு வைத்த நேரத்தில் நடந்த அசம்பாவிதம் அனைவருக்கும் தெரியும்.

அதுபோல் தேர்தலிலும் அம்மா ஆவியின் கோபத்தை பார்க்கத்தான் போகிறார்கள் என்று எடப்பாடியும் பன்னீருக்கும் சாபம் கொடுக்கிறார்கள். அதானே, தர்மயுத்தம் நடத்துறதுக்கு பீச்சுக்குப் போன பன்னீர், சும்மாவாச்சும் பட்டியலை அம்மா கண்ணுல காட்டியிருக்கலாம்.