ஒரே ஒரு பெண்மணி..! யார் மெயின்டெய்ன் பண்றது..! 2 வருட தகராறு..! அடுத்தடுத்து கொலையான 4 பேர்! விருதுநகர் திகில்!

பெண் தகராறினால் அதிமுக நிர்வாகி கொலை செய்யப்பட்டிருப்பது விருதுநகர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


விருதுநகர் மாவட்டத்தில் அல்லம்பட்டி எனும் இடம் அமைந்துள்ளது. இப்பகுதியில் மேற்கு ஒன்றிய மாணவரணி அவைத்தலைவராக சண்முகவேல் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் அதிமுகவை சேர்ந்தவர். ரியல் எஸ்டேட் தொழில் மற்றும் இரும்பு கடை நடத்தி வருகிறார். நேற்று இரவு கடையை அடைத்துவிட்டு வீடு திரும்பிய அவர், வீட்டின் வாசலில் நின்று கொண்டிருந்தார். 

அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த 6 மர்ம நபர்கள் அவரை இழுத்து சென்றனர். பின்னர் சரமாரியாக வெட்ட தொடங்கியுள்ளனர். இதனை பார்த்த சண்முகவேலின் தாயார் தடுக்க முயற்சித்தார். ஆனால் அதற்குள் அவர்கள் சண்முகவேலை கொன்றுவிட்டனர்.

இந்த செய்தி வெளியானதுடன் விருதுநகரில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. ஆங்காங்கே காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அவர்களிடமிருந்து தப்பிப்பதற்காக தினேஷ்குமார் மற்றும் சேர்மராஜ் அதிவேகமாக வாகனத்தை ஒட்டியுள்ளனர். காவல்துறையினர் அவர்களை மடக்கி பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

2018-ஆம் ஆண்டில் முத்துக்காமாட்சி என்பவரது கொலை வழக்கில் சண்முகவேல் முதல் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு இருந்தார். அப்பகுதியில் தகாத உறவில் ஈடுபட்டு வந்த சம்பவத்தில் முத்துக்காமாட்சி கொலை செய்யப்பட்டார். இந்த கொலையினால் இரு பிரிவுகள் இடையே கடமையான கடுமையான சண்டை ஏற்பட்டது. மேலும் சங்கர், அருண்பாண்டியன் ஆகிய இரு பிரிவுகளை சேர்ந்த வரும் கொலை செய்யப்பட்டனர். சண்முகவேல் ஜாமீனில் வெளிவந்திருந்தார். பழிவாங்கும் படலத்தில் 4-வதாக அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று காவல்துறையினர் கூறுகின்றனர்.

இந்த சம்பவமானது விருதுநகர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.