எங்கள் அம்மா! ஜெயலலிதாவிற்கு கோவில்! நெகிழ வைத்த அதிமுக தொண்டர்கள்!

அம்மாவுக்கு அரசாங்கம் நினைவில்லம் கட்டுகிறதோ இல்லையோ! அம்மாவுக்கு கோயில் கட்டிவிட்டோம் நாங்கள்!


கோவையில் ஜெயலலிதாவுக்கு கோயில்கட்டி அதிமுகவினர் பெருமிதம்!

தாய் மீதான பாசத்தில் மகன் கோயில் கட்டுவதை பார்த்திருக்கிறோம். மனைவி மீதான பாசத்திலும் கணவன் கோயில் கட்டியதையும் கேள்விப்பட்டிருக்கிறோம். நடிகை குஷ்புவுக்குகூட மதுரையில் ரசிகர்கள் கோயில் கட்டிய வரலாறு உண்டு.

அம்மா அம்மா என்று ஜெயலலிதாவை அழைப்பதும், வயது வித்தியாசம் பாராமல் அவரது காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குவதும் ஏதோ பதவி மோகத்துக்காகவும், ஜால்ரா அடிப்பதற்காகவும்தான் என பல்வேறு தரப்பினர் கருத்துக்களை அவ்வப்போது வெளிப்படுத்தினாலும் அதையெல்லாம் உடைத்தெறியும் வகையில் அம்மா என்றால் அன்பு மட்டும் அல்ல தெய்வமும்தான் என கோவையில் அதிமுகவினர் சூளுரைத்து முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாகவுக்கு கோயில் கட்டி வழிபட தொடங்கிவிட்டனர்.

கோவை கணேசபுரத்தில் ஆஞ்சநேயர், காலபைரவர் சன்னதிகள் பிரதித்து பெற்றுள்ள நிலையில் தற்போது அங்கே நிறுவப்பட்டுள்ள அம்மா கோயில் அனைவரையும் கவனத்தில் ஈர்த்துள்ளது..

ரூ.5 லட்சம் செலவில் 8 டன் கொண்ட ஒரே கல்லால் ஆன சிலையில் ஜெயலலிதாவின் முகம் பொறிக்கப்பட்டு அவரது வாழ்ந்த காலம் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இதுகுறித்து அதிமுக நிர்வாகிகள் கூறும்போது ஜெயலலிதா இருந்தபோது தங்கள் பகுதிக்கு பல்வேறு நலத்திட்டங்கள் செய்திருப்பதாகவும், அவர் நினைவாக மேலும் பொதுமக்களுக்கு சேவை செய்ய இந்த கோயில் நிறுவப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

இந்தக் கோயிலை உள்ளாட்சித்துறை அமைச்சரும், தொண்டாமுத்தூர் எம்எல்ஏவுமான எஸ்.பி.வேலுமணி சில தினங்களுக்கு முன்னர் திறந்துவைத்தார்.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக எழுந்த சர்ச்சைக்கு விடை கிடைத்தபாடில்லை. விடை கிடைத்தால் என்ன கிடைக்காவிட்டால் என்ன? அவருக்கு அஞ்சலி செலுத்தவும், அவரை போற்றிப் புகழ்பாடவும் ஒரு நல்ல கோயில் கிடைத்துவிட்ட மகிழ்ச்சி அதிமுகவினருக்கு மட்டுமல்ல நமக்கும்தான்!