பரபரப்பான அரசியல் சூழலில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இன்று கூடுகிறது அதிமுக பொதுக்குழு!

அதிமுக பொதுக்குழு கூட்டம் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சென்னையில் இன்று நடைபெறுகிறது.


அதிமுக வின் பொதுக்குழு மற்றும் செயற்குழு சென்னையில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் இன்று காலை தொடங்க உள்ளது. இரண்டு வருடத்திற்கு முன்பாக 2017ம் ஆண்டு நடந்த பொதுக்குழு கூட்டத்தில் அப்போது அதிமுக கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த சசிகலாவை நீக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

கடந்த ஆண்டு அதிமுக பொதுக்குழு செயற்குழு கூட்டம் நடைபெறவில்லை இதனால் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இன்று காலை சென்னை வானகரத்தில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட உள்ளது.

இதில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இடைத்தேர்தல் வெற்றி, நடைபெற இருக்கும் உள்ளாட்சித் தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது போன்ற பல்வேறு விஷயங்கள் இந்த பொதுக் குழுவில் விவாதிக்கப்பட உள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது.