ஆட்சியைத் தக்கவைக்க எடப்பாடியார் அதிரடி மூவ்! ஸ்டாலினின் ஜூன் 3 பதவியேற்பு கனவு டமார்!

தேர்தல் முடிவுகள் எப்படியிருந்தாலும், ஆட்சியை தொடர்ந்து நடத்தவேண்டும் என்பதில் முதல்வர் எடப்பாடி பிடிவாதமாகவும் உறுதியாகவும் இருக்கிறார். அதனால், தேர்தல் முடிவுகள் வரை காத்திருப்பதில் அர்த்தம் இல்லை என்பதையும் புரிந்தே வைத்திருக்கிறார்.


ஒருவேளை தேர்தல் முடிவுகள் தி.மு.க.வுக்கு அதிக சாதகமாக இருக்கும்பட்சத்தில், கட்சிக்குள் குழப்பம் ஏற்பட வாய்ப்பு உண்டு என்பதால், இப்போதே அதிரடி நடவடிக்கை எடுக்க ஆயத்தமாகிவிட்டார்.

இதன் முதல் அறியாக இன்று சட்டசபை சபாநாயகர் தனபாலை, அமைச்சர் சி.வி.சண்முகம் சந்தித்து ஆலோசனை நடத்தினார். அவருடன் அ.தி.மு.க. கொறடா தாமரை ராஜேந்திரனும் உடன் சென்றார்.

அ.தி.மு.க.வில் வெற்றி பெற்று இப்போது தினகரனுக்கு ஆதரவாக பல எம்.எல்.ஏ.க்கள் இயங்கிவந்தாலும், மூன்று பேர் நேரடியாகவே ஆதரவு தெரிவித்துள்ளனர். அறந்தாங்கி ரத்தினசபாபதி, விருத்தாச்சலம் கலைச்செல்வன், கள்ளக்குறிச்சி பிரபு ஆகியோர் தினகரன் ஆதரவாளர்களாக செயல்பட்டு வருகிறார்கள்.

இவர்களைத் தவிர கருணாஸ், தமிமுன் அன்சாரி, தனியரசு ஆகியோர் அ.தி.மு.க. சின்னத்தில் நின்று வெற்றி பெற்றார்கள். இவர்களில் கருணாஸ் ஆரம்பத்தில் எடப்பாடியை எதிர்த்து நின்றாலும், இப்போது அவரிடம் சரண்டர் ஆகிவிட்டார். தனியரசு எடப்பாடிக்கு ஆதரவாக உள்ளார். ஆனால், தமிமுன் அன்சாரி முழுமையாக அ.தி.மு.க.வில் இருந்து வெளியேறிவிட்டதால், அவரையும் கார்னர் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி ரத்தினசபாபதி, கலைச்செல்வன், பிரபு, தமுமுன் அன்சாரி ஆகிய நான்கு பேருக்கும் சபாநாயகர் நோட்டீஸ் அனுப்ப முடிவு செய்திருக்கிறார். இன்றைய நிலையில் அ.தி.மு.க. 3 இடைத்தேர்தல் தொகுதியில் நிச்சய வெற்றி அடையவேண்டும் என்ற நிலை இருக்கிறது. இந்த எதிர்ப்பு எம்.எல்.ஏ.க்கள் மாறி நின்றால் 5 தொகுதிகளில் நிச்சயம் ஜெயிக்க வேண்டும். ஆனால், இந்த நோட்டீஸ் வழங்கப்பட்டு, அவர்கள் பதவி இழப்பு ஆகும் பட்சத்தில், அ.தி.மு.க. ஒருசில இடைத்தேர்தல் தொகுதிகளில் வென்றாலே போதும்.

அதனாலே இப்போதே அதிரடி நடவடிக்கையைத் தொடங்கியிருக்கிறார் எடப்பாடி. ஜூன் 3ம் தேதி ஆட்சியை பிடித்துவிடலாம் என்று கனவில் இருந்த ஸ்டாலின் இப்போது அதிர்ச்சியில் இருக்கிறார்.