சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்த நிர்மலா பெரியசாமி அரவக்குறிச்சி தொகுதிகள் செந்தில்பாலாஜிக்கு எதிராக அதிமுக வேட்பாளராக போட்டியிடுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
அரவக்குறிச்சி! செந்தில்பாலாஜிக்கு எதிராக களமிறங்கும் பஞ்சாயத்து பார்ட்டி நிர்மலா பெரியசாமி!

அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் செந்தில் பாலாஜிக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. பலம் வாய்ந்த வேட்பாளரான செந்தில்பாலாஜிக்கு எதிராக அதே பலமான வேட்பாளரை இறக்க அதிமுக தயாராகி வருகிறது. தமிழக அளவில் பிரபலமான ஒருவர் அதிமுக வேட்பாளராக இருந்தால் செந்தில் பாலாஜி எதிர் கொள்ள வசதியாக இருக்கும் என்று அதிமுக தலைமை கருதுகிறது. இதனை மனதில் வைத்துக்கொண்டு சொல்வதெல்லாம் நிகழ்ச்சி மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானது நிர்மலா பெரியசாமி அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிட விருப்ப மனு அளித்தார்.
ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் நிர்மலா பெரியசாமி அழைத்து நேர்காணலும் நடத்தினர். அப்போது தனக்கு வாய்ப்புக் கொடுத்தால் செந்தில் பாலாஜியை எளிதாக வேண்டும் என்றும் செந்தில் பாலாஜி செலவு செய்வதை விட கூடுதலாக செலவு செய்ய தன்னிடம் சோர்ஸ் இருப்பதாகவும் கூறி எடப்பாடி மற்றும் ஓபிஎஸ்சையே அதிர வைத்துள்ளார் நிர்மலா பெரியசாமி.
நேர்காணல் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த போதும் அரவக்குறிச்சி என்பது அதிமுகவின் கோட்டை அங்குதான் போட்டியிட்டால் செந்தில் பாலாஜி எளிதாக வைத்து விடுவேன் என்று கூறி செய்தியாளர்களுக்கும் பீதி கிளப்பியுள்ளார் நிர்மலா. அதிமுக வட்டாரங்களில் விசாரித்தபோது நிர்மலா பெரியசாமி வேட்பாளராக எம் ஆர் விஜய பாஸ்கர் விரும்பவில்லை என்றாலும் கூட அவரை சமாதானப்படுத்தி நிர்மலாவை அரவக்குறிச்சியில் நிறுத்த அதிமுக மேலிடம் முடிவு செய்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.