ரூபாய் 14 லட்சத்துக்கு ஊஊஊ! அதிமுக பெண் எம்எல்ஏ கணவருக்கு நேர்ந்த உள்ளாட்சித் தேர்தல் பரிதாபம்..!

திருச்சியில் உள்ள மண்ணச்சநல்லூர் தொகுதியில் 14 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுத்து கவுன்சிலர் பதவிக்குப் போட்டியிட்ட அதிமுக எம்எல்ஏ பரமேஸ்வரியின் கணவர் முருகன் தோல்வி அடைந்துள்ளார்.


திருச்சியில் உள்ள மண்ணச்சநல்லூர் தொகுதியில் அதிமுக சார்பாக முருகன் என்பவர் போட்டியிட்டார். இவர் அதிமுக எம்எல்ஏ பரமேஸ்வரியின் கணவர் ஆவார். இந்த மண்ணச்சநல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் பாலையூர், கரியமாணிக்கம், வலையூர் ஆகிய மூன்று ஊராட்சிகள் உள்ளன. இதில் குறிப்பாக வலையூர் ஊராட்சியில் கிராம முக்கியஸ்தர்கள் சார்பில் உள்ளாட்சி பதவிகள் ஏலம் விடப்பட்டன.

அந்த ஏலத்தில் ஒன்றிய கவுன்சிலர் பதவியை 14 லட்சம் ரூபாய்க்கு அதிமுகவை சேர்ந்த முருகன் என்பவர் ஏலம் எடுத்தார். இதேபோல மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவியும் ஊராட்சி தலைவர் பதவியும் ஏலம் விடப்பட்டது. இதனையடுத்து போலீசாருக்கு வந்த புகாரின் பேரில் ஏலம் எடுத்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் மண்ணச்சநல்லூரில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் என்ன பட்டு வந்தன.

இதில் திமுக வேட்பாளர் ஸ்ரீதர் என்பவர் 2511 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இதனால் அதிமுக வேட்பாளர் முருகன் தோல்வியை தழுவினார். அதிமுக எம்எல்ஏ பரமேஸ்வரியின் கணவர் முருகன் தோல்வி அடைந்தது அப்பகுதியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இதற்கு முன்பாக அதிமுக எம்எல்ஏ பரமேஸ்வரி முதல் முறையாக எம்எல்ஏ ஆனபோது மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை ஈர்ப்பதற்காக பல காரியங்களில் ஈடுபட்டார். கடந்த சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றதையடுத்து மண்ணச்சநல்லூர் துறையூர் சாலை பூனாம்பாளையத்தில் அமைந்துள்ள சட்டி கருப்பு ஆலயத்தில் கிடா விருந்து ஏற்பாடு செய்திருந்தார்.

25 ஆடு 250 கோழி 25 கிடாக்களையும், 250 கோழிகளையும் வெட்டிப் பலி கொடுத்து தன்னுடைய நேர்த்திக்கடனை செய்து முடித்தார் பரமேஸ்வரி. அது மட்டுமில்லாமல் அந்த விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் எம்எல்ஏ பரமேஸ்வரி விருந்து பரிமாறி உபசரித்த விதம் அனைவராலும் பாராட்டப்பட்டது. இந்த விருந்து விழாவில் முன்னாள் அமைச்சர்கள் எம்எல்ஏக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

சுமார் மூன்றாயிரம் பேர் இந்த விருந்தில் கலந்துகொண்டனர். தனக்கு அமைச்சர் பதவி கிடைக்க வேண்டும் என்பதற்காகவே எம்எல்ஏ பரமேஸ்வரி இத்தகைய விருந்து ஏற்பாடு செய்ததாக பலரும் கூறியது குறிப்பிடத்தக்கது.