தேமுதிகவுக்கு கூட்டணி கதவை சாத்தியது அதிமுக! அதிர்ச்சியில் கேப்டன் !Live Updates

சென்னையில் 2வது முறையாக அதிமுக - தேமுதிக இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது.


இன்னும் சற்று நேரத்தில் தேமுதிக அலுவலகத்தில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற உள்ளது..

கொடுப்பதை வாங்கிக் கொண்டால் கூட்டணி என கூறி அதிமுகவும் கேப்டனுக்கு கதவை சாத்தியது

சென்னை : தேமுதிக தலைமை அலுவலகத்தில் விஜயகாந்த் தலைமையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது. எல்.கே.சுதீஷ், பார்த்தசாரதி, மோகன்ராஜ் உள்ளிட்ட முன்னணி நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.

விஜயகாந்த் வருகை தேமுதிக அலுவலகம்

தேமுதிக அலுவலகத்திற்கு சுதீஷ் , இளங்கோவன்,  பார்த்தசாரதி வருகை.. 

தேமுதிக கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை.

தேமுதிக - அதிமுக இடையே கூட்டணி பேச்சுவார்த்தை உடன்பாடு ஏற்படவில்லை. மீண்டும் இன்று அதிமுக நிருவாகிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.

நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வி அடைந்துள்ளது.. 

தொடர்ந்து தொகுதி பங்கீடு இழுபறி உள்ளது.. 

பாமக கேட்க்கும் தொகுதியே தேமுதிகவும் கேட்பதாக தகவல்.

4 மணி நேரமாக நடைபெற்ற பேச்சுவார்த்தையின் முடிவில் எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை. செய்தியாளர்களை சந்திக்காமலேயே சுதிஷ் உள்ளிட்டோர் புறப்பட்டனர்

அமைச்சர் பியூஸ் கோயல் இரவு பத்து முப்பது மணிக்கு டெல்லி செல்ல வேண்டிய நிலையில் அதனை ரத்து செய்துவிட்டு பேச்சுவார்த்தையில் பங்கேற்றார்.

இரவு பத்து மணி அளவில் சென்னை டிரைடன்ட் ஹோட்டலில் தேமுதிக - அதிமுக பேச்சுவார்த்தை தொடங்கியது.

நேற்று இரவு 2வது முறையாக தேமுதிக தொகுதிப் பங்கீட்டுகுழுவினல் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் மற்றும் அதிமுக அமைச்சர்களை சந்தித்தனர்.