குமரி பாஜகவுக்கு, ஆரணி பாமகவுக்கு, கள்ளக்குறிச்சி தேமுதிகவுக்கு! சற்று முன் வெளியான அதிமுக கூட்டணி தொகுதி பட்டியல்!

அதிமுக கூட்டணியில் போட்டியிடும் தொகுதிகளுக்கான பட்டியல் வெளியாகி வருகிறது.


பாஜகவில் ஒதுக்கப்பட்டுள்ள 5 தொகுதிகள் எந்தெந்த தொகுதிகள்  தொடர்பாக இறுதி செய்ய அதிமுக அலுவலகம் செல்ல இருப்பதாக மத்திய அமைச்சர் மத்திய பியூஷ் கோயல் தெரிவித்தார். அதன்படி அவர் பொன் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோருடன் அங்கு சென்றார். 

தொடர்ந்து அதிமுக அலுவலகத்திற்கு பாமகவின் ஏ.கே. மூர்த்தி , ஜி.கே.மணி, புதிய நீதி கட்சி ஏ.சி.சண்முகம் வருகை தந்தனர். அதிமுக அலுவலகத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி. பழனிச்சாமி வருகை தந்தார். தேமுதிக நிர்வாகிகள் சுதீஷ்,  அழகாபுரம் மோகன்ராஜ், இளங்கோவன் , பார்த்தசாரதி அக்பர் உள்ட்டோர் வந்தனர்.  

அதிமுக அலுவலகத்திற்கு  ஓ.பன்னீர்செல்வம் வருகை தந்தார். திமுக அலுவலகத்திற்கு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி ஜி.கே. வாசன், ஞானதேசிகன் மற்றும் முக்கிய நிர்வாகிகள் வந்தனர். அதிமுக அலுவலகத்திற்கு வந்த கூட்டணி கட்சியின் நிர்வாகிகளை மா.போ. பாண்டியராஜன், அமைச்சர் ஜெய்குமார், வளர்மதி மற்றும்  நிர்வாகிகள் வரவேற்றனர். 
 
இதனை தொடர்ந்து கூட்டணி கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகள் என்பதை இறுதி செய்வது தொடர்பாக ஆலோசனை நடைபெற்றது. இதனை தொடர்ந்து, தமிழ் மாநில காங் கட்சிக்கு தஞ்சாவூர் தொகுதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. 

தென்காசி தொகுதி புதிய தமிழகம் கட்சியின் கிருஷ்ணசாமிக்கு வழங்கப்படுகிறது. புதுச்சேரி தொகுதி என்.ஆர்.காங் கட்சிக்கும் உறுதி செய்யப்பட்டுள்ளது. வேலூர் தொகுதி புதிய நீதிகட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது.  

பா.ம.க, பா.ஜ.க, தே.மு.தி.க உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்திட்ட போதே தங்களுக்கு தேவையான உத்தேச தொகுதிகளின் பட்டியலை கொடுத்தன. அதன்படி பா.ம.க வும் தே.மு.தி.கவும் ஒரே தொகுதிகளை கேட்பதால் முடிவெடுப்பதில் தாமதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. 
 
ஆனால் பா.ஜ.கவுக்கு கன்னியாகுமரி, சிவகங்கை, தூத்துக்குடி ஒதுக்கப்பட உள்ளது. பா.ஜ.கவுக்கான மீதமுள்ள இரண்டு தொகுதிகள் கோவை மற்றும் நீலகிரி என தகவல். 

பா.ம.கவுக்கு தர்மபுரி, ஆரணி, மத்திய சென்னை, கிருஷ்ணகிரி, சிதம்பரம், திண்டுக்கல், மயிலாடுதுறை, கடலூர், ஸ்ரீபெரும்பத்தூர் ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் தர்மபுரி, ஆரணி, அரக்கோணம், ஸ்ரீபெரும்பத்தூர், சிதம்பரம் உறுதி. மீதமுள்ள் இரண்டு தொகுதிகள் பேச்சுவார்த்தையின் முடிவில் இறுதி செய்யப்படும்.

இதே போல் தேமுதிகவுக்கு கள்ளக்குறிச்சி, திருவள்ளூர், திருப்பூர் தொகுதிகள் உறுதியாகியுள்ளன. எஞ்சிய ஒரு தொகுதி குறித்து பேச்சுவார்த்தை நடைபெறுகின்றன.