கற்பழிப்பால் கர்ப்பம் ஆனாலும் பெண்கள் கருவை கலைக்க முடியாது! வந்தது புது சட்டம்!

ஐக்கிய நாடுகள் மாகாணத்தில் கருகலைப்பு விவகாரத்தில் பெரும் கெடுப்பிடி கொடுத்துவரும் நிலையில் பலாத்காரம் கூட விதிவிலக்கு இல்லை விதி , 10 முதல் 99 வயதினர் வரை எவருக்கும் கரு கலைப்பு செய்ய தடை விதித்தும் மீறினால் தண்டனை கடுமையாக இருக்கும் எனவும் அலபாமா சட்டம் நிறைவேற்றபடவுள்ளது.


கடந்த செவ்வாய் கிழமை அன்று அமெரிக்காவின் அலபாமா செனட் ஐக்கிய மாகாணங்களில் மிகவும் கட்டுப்படுத்தப்பட்ட கருக்கலைப்பு மசோதாவை நிறைவேற்றியது, இதன்படி கருவை கலைக்கும் எந்த மருத்துவருக்கும் சிறை தண்டனை உண்டு என அறிவுறுத்தியுள்ளது குடியரசுக் கட்சியின் தலைவரான ஆளுனர் இந்த சட்ட மசோதாவில் கையெழுத்திடுவதற்கு செனட் அனுப்பியதாக கூறப்படுகிறது

சிசுவின் அல்லது தாயின் உயிருக்கு ஏதேனும் பாதிப்பு இருக்கும் பட்சத்தில் மட்டுமே கருகலைப்பு அனுமதிக்கப்படும் என்ற இந்த சட்ட மசோதா பலாத்காரத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனது சொந்த உடலின் மீதான உரிமையை தட்டி பறிப்பாதாகவுள்ளது என அமெரிக்காவின் மனித உரிமை பாதுகாப்பு அமைப்பு, ACLU, சார்பில் இதற்கு எதிராக வழக்கு தொடரவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது பலாத்காரத்தால் உண்டான கருவை கூட இனி அங்கு கலைக்க முடியாது.

ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பின் பதவி ஏற்ப்பிற்க்கு பின்னர்  நீதிமன்றம் ஒரு பழமைவாத பெரும்பான்மையுடன் செயல்ப்படுவதாகவும்  சில குடியரசுக் கட்சியினர் குற்றம் சாட்டியதோடு, பெண்கள் மீதான பாலியல் வன்முறைகளை கட்டவிழ்க்கும் ஆண்களை கண்டிப்பதற்க்கு மாறாக இவ்வகை சட்டங்கள் உதவுவதாக உள்ளது எனவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்

பல பழமைவாத நாடுகள் கருக்கலைப்பிற்க்கு எதிராக கடுமையான  சட்டங்களை இயற்றியுள்ளன, அவற்றில் சில சவாலானவையும் கூட  ஆனால் உச்ச நீதிமன்றத்தில்   மக்கள் தங்களது சொந்த நாட்டில்  அரசியலமைப்பு சட்டங்களின் அத்தியாவசிய உரிமையைக்காக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

அமெரிக்காவை பொறுத்தவரையில் 28 மாநிலங்களில் 50 கருக்கலைப்புகள் நடந்துள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.இதனை குறைப்பதற்காக இதுவரை 300 க்கும் மேற்பட்ட புதிய விதிகளை அறிமுகப்படுத்தியுள்ளதும் குறிப்பிடதக்கது