குறுகிய சாலை..! அசுர வேகம்..! லேசாக உரசிய லாரி..! கீழே விழுந்து டயருக்குள் சிக்கி நசுங்கிய 2 பெண்கள்! திருப்பூர் பரிதாபம்!

திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் பனியன் கம்பெனி பெண் தொழிலாளிகள் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.


திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே ஆதாரம்பாளையத்தில் சிவமணி, கனகமணி என்ற இரு பெண்கள் பனியன் கம்பெனியில் பணியாற்றி வந்துள்ளனர். இந்நிலையில் இருவரும் இருசக்கர வாகனத்தில் அவினாசி அடுத்த நம்பியம்பாளையம் அருகே சென்றுகொண்டு இருந்துள்ளனர்.

அப்போது அந்த வழியே வந்த இரும்புக் கம்பிகள் ஏற்றி சென்ற லாரி சென்றுகொண்டிருந்தது. பக்கவாட்டில் இருசக்கர வாகனத்தில் பெண்கள் செல்வதை அறியாத ஓட்டுநர் லாரியை இடது புறம் லேசாக திருப்பி ஓட்டியுள்ளார். இதனால் எதிர்பாராதவிதமாக இருசக்கர வாகனத்தின் மீது லாரி உரசியுள்ளது.

இதனால் இரு பெண்களும் நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளனர். அப்போது லாரியின் பின்பக்க சக்கரத்தில் சிக்கி இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

தகவல் அறிந்து வந்த போலீசார் இருவரின் உடலையும் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்துக்கான காரணம் குறித்து வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.