டெல்லியைத் தக்கவைக்கும் ஆம் ஆத்மி கட்சி! பா.ஜ.க. பிரச்சாரத்துக்கு ஒரு பலனும் இல்லை!

நாட்டின் தலைநகர் டெல்லி சட்டமன்றத் தேர்தலில் இப்போது ஆளும் ஆம் ஆத்மி கட்சியே தொடர்ந்து ஆட்சியைத் தக்கவைக்கும் என்று தெரிகிறது.


மொத்தமுள்ள 70 தொகுதிகளில் பாதிக்கும் மேற்பட்ட இடங்களைக் கைப்பற்றுவது யார் எனும் கட்டத்தை முதல் ஒரு மணி நிலவரமே காட்டிவிட்டது. தற்போதைய நிலவரப்படி, ஆம் ஆத்மி கட்சி 43 இடங்களிலும் பா.ஜ.க. 16 இடங்களிலும் காங்கிரஸ் கட்சி ஓர் இடத்திலும் முன்னிலையில் இருக்கின்றன. 

முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் போட்டியிட்ட புது டெல்லி தொகுதியில் அவரே முன்னிலையில் இருக்கிறார். ஆம் ஆத்மியிலிருந்து வெளியேறி காங்கிரஸ், பாஜகவில் இணைந்தவர்கள் தோல்வி முகத்தை எதிர்கொண்டுள்ளனர்.

முக்கால்வாசி தொகுதிகளில் ஆம் ஆத்மி முன்னிலை - பாஜகவின் டெல்லிக் கனவு தகர்ந்தது. ஆ.ஆ. - 57, பாஜக அணி 13, காங் -0.