கல்லூரி மாணவரின் காதல் வலையில் வீழ்ந்த பிளஸ் 2 மாணவிக்கு நேர்ந்த கதி!

காதல் ஜோடியான பிளஸ் டூ மாணவியும், கல்லூரி மாணவரும் ஒருவரையொருவர் துப்பட்டாவால் இறுகக் கட்டிக் கொண்டு ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டனர்.


   கோவை  மற்றும் போத்தனூர் இடையேயுள்ள தண்டவாளப் பகுதியில் இருவரது உடல்களும் கிடந்தன. தகவல் அறிந்து வந்த ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

 

  தண்டவாளத்தின் அருகே இளம்பெண்ணின் கைப்பையையும், இளைஞரின் பேன்ட் பையில் இருந்து கோட்டயத்தில் இருந்து சென்னை செல்வதற்கான முன்பதிவில்லா டிக்கெட்டையும் போலீசார் கைப்பற்றினர்.

 

  மேலும் அவற்றில் இருந்த ஆவணங்களைக் கொண்டு அவர்கள் கேரள மாநில அடூர் எடுகட்டும் விளா என்ற இடத்தைச் சேர்ந்த அமல்குமார் - சூர்யா எனத் தெரிய வந்தது. அமல் குமார்  பி.காம். முதலாம் ஆண்டும், சூர்யா பிளஸ்-2வும் படித்து வந்த நிலையில் அவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததனர்.

 

வீட்டை விட்டு வெளியேறி சென்னை சென்றதும், செல்லும் வழியில் திடீர் விபரீத முடிவுக்கு வந்து தற்கொலை செய்துகொண்டதும் தெரிய வந்தது.

கடைசி நேரத்தில் மனம் மாறி விடக்கூடாது என்பதற்காக இருவரும் தங்களது உடலை துப்பட்டாவால் கட்டி தற்கொலை செய்து உள்ளனர்.

 

இருவரின் உடல்களும் தண்டவாளத்தில் கிடந்ததால் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் வேலைக்கு செல்பவர்களும், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ- மாணவிகளும் சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் நடந்து கோவை ரெயில் நிலையத்துக்கு வந்து தங்கள் இடங்களுக்குச் சென்றனர். 

 

   படிக்கும் வயதில் படிப்பில் கவனம் செலுத்தாமல் இப்படி காதலில் சிக்கினால் என்ன ஆகும் என்பதற்கு இவர்கள் இருவரும் சான்றாகியுள்ளனர்.