ஹைதராபாத்தில் கள்ளக்காதலனின் உதவியோடு கணவனைக் கொன்ற பெண் உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கணவனின் நன்பனை காதலனாக்கிய பெண்! கண்டுபிடித்த கணவனுக்கு நேர்ந்த கொடூரம்!
ஹைதராபாத்தின் பேகம்பேட் பகுதியைச் சேர்ந்த பாபா கான் என்பவர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 15-ஆம் தேதி மர்மமான முறையில் தனது வீட்டில் இறந்து கிடந்தார். இது தொடர்பாக போலீசார் விசாரணைக்கு வந்த போது அவர் மாரடைப்பால் இறந்ததாக அவரது மனைவி ஸஹீதா பேகம் தெரிவித்தார்.
இருப்பினும் சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.விசாரணையில் ஸஹீதா பேகம், பாபா கான் இறப்பதற்கு சில மாதங்களுக்கு முன்பிருந்து ஃபையஸ் ஆலம் என்பவருடன் அதிக நேரம் தொலைபேசியில் பேசியது தெரியவந்தது.
இதையடுத்து ஸஹீதா மீது சந்தேகம் வலுத்ததையடுத்து அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டதாக போலீசார் கூறினார். பாபாவின் நண்பரான பயஸ் அடிக்கடி வீட்டிற்கு
வந்து சென்றுள்ளார். அந்த வகையில் ஸஹீதா - ஃபயஸ் இடையேயான தொடர்பு கள்ளக்காதலாகியுள்ளது.
தனது நண்பனுடன் மனைவி
கள்ளக்காதல் வைத்திருப்பது பாபாகானுக்கு தெரியவந்த போது அவர் சஹீதாவை கண்டித்ததாகவும் ஃபயசுடன் பழகத் தடை விதித்தாகவும் கூறப்படுகிறது. இதனால் இருவரும் சேர்ந்து பாபாகானை கொலை செய்ய திட்டமிட்டதாகவும் தெரிவித்தனர்.
இதற்காக ஃபயஸ்கானின் நண்பர்களான பக்கார், அக்ரம், சஜ்ஜத் ஆகியோரின் உதவியை நாடியதாகவும், 5 பேரும் சேர்ந்து பாபாகானை கழுத்தை நெறித்துக்கொன்றதாகவும் போலீசார் கூறினர்.
இந்நிலையில் கடந்த 6-ஆம் தேதி ஸஹீதா பேகம் , ஃபயஸ் ஆலம்,பக்கார், அக்ரம் ஆகியோரை கைது செய்த போலீசார் தலைமறைவான சஜ்ஜத்தை தேடி வருகின்றனர்.