கொரோனா பாதிப்புகளை உடனுக்குடன் அறிய உதவும் இணையதளம்!

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்புகள் பற்றி உடனுக்குடன் அறிந்துக்கொள்ள தனியார் இணையதள சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.


இந்த இணையதள சேவையை பயன்படுத்தி உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையையும், இந்தியாவில் மாநிலங்கள் வாரியாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் நாம் எளிதாக அறியலாம். அதோடு மட்டுமல்லாமல் மாவட்டங்கள் வாயிலாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையையும் நாம் இந்த இணையதள சேவையை பயன்படுத்தி அறியலாம் .

மேலும் இணையதளத்தை பயன்படுத்தி உங்கள் ஊர்களில் எந்தெந்த இடங்களில் கொரோனா பரிசோதனை செய்துகொள்ள முடியும் என்ற விவரங்களும் கொடுக்கப்பட்டுள்ளன. அதோடு மட்டுமல்லாமல் மாநிலங்கள் வாரியாக அவசர உதவி எண்ணும் கொடுக்கப் பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

https://covid19indiatracker.com/#/india