பெல்ஜியம் பெண்ணுக்கு இந்தியாவில் ஏற்பட்ட விபரீத அனுபவம்!

பெல்ஜியத்தைச் சேர்ந்த பெண்ணிடம் அத்துமீறியதாக டெல்லியைச் சேர்ந்த பயண முகவரை போலீசார் கைது செய்துள்ளனர்.


காஷ்மீரைச் சேர்ந்த இம்ரான் டெல்லியில் பயண முகவராக உள்ளார். இவர் டெல்லியில் கடை ஒன்றையும் வைத்து நடத்தி வருகிறார். வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு டெல்லியை சுற்றிக்காட்டுவது இவர் வேலை.

 

கடந்த டிசம்பர் மாதம் டெல்லி வந்த பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த பெண், இம்ரான் மூலமாக ஒரு ஹோட்டலில் ரூம் புக் செய்திருந்தார். ஆனால் அவர் ஓட்டலுக்கு சென்ற போது ஹோட்டல் அருகே போராட்டம் நடைபெற்றது.

 

இதனால் அந்த ஹோட்டலில் தங்க விரும்பவில்லை என்று இம்ரானிடம் கூறி பணத்தை திரும்ப பெற்றுள்ளார். இந்நிலையில் அவரை தொடர்பு கொண்ட இம்ரானும் அவரது சகோதரரும் மலிவுக் கட்டணத்தில் தங்கும் விடுதி, உணவு உள்ளிட்டவற்றை ஏற்பாடு செய்வதாகக் கூறியுள்ளனர்.

 

இதனை நம்பி அந்த பெல்ஜியம் பெண் இம்ரானுடன் சென்றுள்ளார். அப்போது ஏற்கனவே ஓட்டல் ரூமை ரத்து செய்த விவகாரத்தில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.  அப்போது இம்ரான் பெல்ஜியம் பெண்ணை அத்துமீறித் தாக்கியதாக கூறப்படுகிறது

 

டெல்லியில் இருக்கும் வரை அந்த பெண் இதுபற்றி புகார் அளிக்கவில்லை. ஆனால் பெல்ஜியம் சென்றபின் டெல்லியில் தனக்கு நேர்ந்த அவலம் குறித்து அந்தப் பெண் தனது நாட்டுத் தூதரகத்தில் புகார் அளித்தார்.

 

அந்த நாட்டுத் தூதரக அதிகாரிகள், இந்தியத் தூதரக அதிகாரிகளை தொடர்பு கொண்டதையடுத்து வழக்கு போலீசாருக்கு வந்தது. டெல்லி வினோத் நகரில் உள்ள இம்ரான் வீட்டுக்குச் சென்ற போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.


Photo: Model