தாய் மகளுக்கு தொடக்கூடாத இடங்களில் தொட்டு தொந்தரவு! டென்னிஸ் பயிற்சியாளர் செய்த கேவலமான செயல்!

மும்பையில் இளம் டென்னிஸ் வீராங்கனையிடம் தவறாக நடந்துகொண்ட டென்னிஸ் பயிற்சியாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.


ஹரியானாவைச் சேர்ந்த 15 வயதுச் சிறுமி மும்பை கொலாபாவில் நடைபெறும் பள்ளிகளுக்கு இடையேயான தேசிய அளவிலான போட்டிகளில் கலந்துகொள்வதற்காக வந்திருந்தார்.

 

கடந்த திங்கட்கிழமை சிறுமி உடைமாற்றும் அறைக்குச் சென்ற போது அங்கு இருந்த டென்னிஸ் பயிற்சியாளர் பிரதீப் சங்வான் சிறுமியை தவறான இடங்களில் தொட்டதாகக் கூறப்படுகிறது. இதற்கு சிறுமி எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தனக்கு ஒத்துழைத்தால் போட்டிகளில் தேர்வு பெறச் செய்வதாக சங்வான் ஆசை காட்டியதாகக் கூறப்படுகிறது

 

ஆனாலும் சிறுமியை சாங்வான் விடவில்லை. மிரட்டி சிறுமியை பணிய வைத்து தொடக்கூடாத இடத்தில் தொட்டதோடு, தனது பாலியல் தேவைகளையும் சிறுமியை வைத்து நிறைவேற்றியுள்ளான் சாங்வான்.

 

தனக்கு நேர்ந்த கொடுமையை சிறுமி தனது தாயை தொடர்பு கொண்டு கூறியுள்ளார். இந்த விவரம் தெரிய வந்த போது உடனடியாக மும்பை புறப்பட்டுச் சென்ற சிறுமியின் தாய் சங்வானோடு சண்டையிட்டார்.

 

அப்போது சாங்கவான் சிறுமியின் தாயிடமும் அத்துமீறியுள்ளான். ஆனால்  சங்வான் தனது கையை முறுக்கி தன்னை அடக்கியதாக அவர் கூறுகிறார்

 

சிறுமியும், அவரது தாயும் இது தொடர்பாக கொலாபா காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் போக்சோ உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து பயிற்சியாளர் பிரதீப் சங்வானை கைது செய்தனர்

 

இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுள்ள போலீசார் சம்பவம் நடைபெற்ற சி.சி.டி.வி. கேமரா பாதிவுகளை பெற நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்