தமிழகத்தில் உள்ள ஒரு கோயிலில் பக்தர்களுக்கு, பிரசாதமாக பிரியாணி வழங்கப்படுவது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
இந்த கோவிலில் பிரசாதம் பிரியாணி தான்! எங்கனு தெரியுமா?

வழக்கமாக, கோயில்
செல்வோருக்கு, புளியோதரை, சர்க்கரை பொங்கல், வெண் பொங்கல் போன்றவைதான் பிரசாதமாக
வழங்கப்படும். இந்நிலையில், மதுரையில் உள்ள ஒரு கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக,
பிரியாணியை வழங்குகின்றனர்.
இந்த கோயில்,
திருமங்கலம் தாலுக்காவிற்கு உள்பட்ட வடக்கம்பட்டி கிராமத்தில் அமைந்துள்ளது.
முனியாண்டி சுவாமி கோயிலான இங்கு, எல்லா நாளும் பிரியாணி பிரசாதம் வழங்கப்படும்
என்று நினைக்காதீர்கள்.
ஆண்டு தோறும் ஜனவரி
மாதத்தில் 3 நாட்கள் மட்டும் கோயில் திருவிழா நடைபெறும். அந்த நேரத்தில்,
பக்தர்களுக்கு சுவையான மட்டன் பிரியாணி தயாரிக்கப்பட்டு
விநியோகிக்கப்படுகிறது.
இந்த பிரியாணி
விநியோகம் இந்த ஆண்டும் வரும் ஜனவரி 24 முதல் 26ம் தேதி வரை நடைபெற உள்ளது.
இதுபற்றி கோயில் விழா ஏற்பாட்டுக் குழு உறுப்பினர் முனிஸ்வரன் பேசுகையில்,
‘’ஆண்டுதோறும் கோயில் திருவிழா நடைபெறும் நாட்களில், காலை உணவாக பிரியாணி
விநியோகித்து வருகிறோம். எவ்வித பாரபட்சமும் இன்றி அனைத்து தரப்பினருக்கும்
பிரியாணி வழங்குகிறோம். இதற்காக, 2000 கிலோ அரிசி ஒதுக்கீடு செய்யப்படுவது
வழக்கம்,’’ என்று குறிப்பிட்டார்.
மொத்தத்தில், சைவம்,
அசைவம் என்ற பாகுபாடு இன்றி, பக்தர்களின் மனநிறைவு என்பதே தங்களின் நோக்கம்
என்றும் அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.