ஸ்கூட்டி ஹேண்டில் பாரில் இருந்து சீறிய பாம்பு..! வண்டியை எடுக்க வந்த பெண்ணை நிலைகுலைய வைத்த சம்பவம்! எங்கு தெரியுமா?

உலகெங்கும் கொரனா செய்தியே அதிகமாக பரவப்படும் நிலையில் எங்களை மறந்துவிட்டீர்களா என்று கேட்பது போல் ஸ்கூட்டரில் அமர்ந்து கொண்டு பாம்பு கேட்பது போல் வெளிவந்த போட்டோ வைரலாகி வருகிறது.


கொரனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடெங்கும் ஊரடங்கு அமலில் இருப்பதால், அனைவரும் தங்களுடைய வாகனங்களை வீட்டிலேயே ஓரங்கட்டி வைத்துள்ளனர். அத்தியாவசிய தேவைகளை தவிர மக்கள் வேறு எதற்காகவும் வெளியில் வருவதில்லை. உலகெங்கும் கொரனா அச்சுறுத்தல் அதிகமாகி வரும் நிலையில் டிவி பத்திரிகை என எல்லா செய்திகளுமே அதைப் பற்றித்தான் வெளியிடுகிறார்கள். வேறு செய்திகளே கிடையாது.

இதற்கிடையே திடீரென சுவாரஸ்யமான சம்பவம் நடைபெற்று அது வைரலாகி மற்ற செய்திகளுக்கு நடுவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அதுதான் பாம்பு போட்டோ வைரல். டிவிட்டரில் வெளியான அந்த புகைப்படத்தில் நீண்ட நாட்களாக ஓரங்கட்டிய ஸ்கூட்டரை பெண் உரிமையாளர் எடுக்கும்போது ஹேண்டில் பார் துவாரத்தில் இருந்து பாம்பு ஒன்று உஷ் என்ற சத்தமிட்டு வெளியில் வந்தது. இதை பார்த்த உரிமையாளர் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

பின்னர் சுதாரித்து கொண்டு அதை போட்டோ எடுத்து டிவிட்டரில் பகிர்ந்துள்ளார். எனவே நீண்ட நாட்களுக்கு பிறகு வாகனங்களை எடுக்கும் உரிமையாளர்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என சமூக வலைதளவாசிகள் தங்கள் கமெண்ட்டில் பதிவிட்டு வருகின்றனர்.