கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே எல்லைப் பாதுகாப்பு படை வீரர் வீட்டில் திடீரென பாம்பு வந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
வீட்டு சமையல் அறைக்குள் படம் எடுத்து ஆடிய ஆறு அடி நீள நல்ல பாம்பு..! பிறகு நடந்தது என்ன? கன்னியாகுமரி திகுதிகு!
திரிபுராவில் பணிபுரியும் எல்லைப் பாதுகாப்ப படை வீரரான ரவிச்சந்திரனின் சொந்த ஊர் கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அடுத்த களிமார் கிராமம் ஆகும். இவருக்கு பிரகலா என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். ரவிச்சந்திரன் வீட்டின் பின்புறம் சமையல் அறை உள்ளது. ரவிச்சந்திரனி மனைவி பிரகலா சமையல் செய்ய அந்த அறைக்கு சென்று விறகுகள் எடுத்துள்ளார்.
அப்போது விறகுகளுக்கு நடுவில் 6 அடி நீள பாம்பு ஒன்று சீறியது. இதை கண்டு பயந்து போன பிரகலா சத்தம் போட்டார். பின்னர் அக்கம் பக்கத்தினர் அங்கு வந்து பின்னர் குளச்சல் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் ரவிச்சந்திரன் வீட்டு சமையல் அறையில் இருந்த பாம்பை பிடித்தனர்.
பின்னர் வேளிமலை வன ஊழியர்களுக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் வந்த பின் பிடிபட்ட பாம்பு வன ஊழியர்களிடம் தீயணைப்பு வீரர்கள் ஒப்படைத்தனர். வன ஊழியர்கள் அந்த பாம்பை அடர்ந்த காட்டுப்பகுதிக்கு கொண்டுச் சென்று விட்டனர். பாம்பு என்றாலே படையும் நடுங்கும் என்பார்கள். எல்லைப் பாதுகாப்பு படை வீரர் மட்டும் என்ன விதிவிலக்கா?