அ.தி.மு.க.வின் முதல்வர் வேட்பாளர் யார் என்பதுதான், இன்று திரும்பிய பக்கமெல்லாம் கேட்கப்படுகிறது. இந்த விவகாரத்தில், எடப்பாடி பழனிசாமிக்கும் ஓ.பன்னீர் செல்வத்துக்கும் இடையே ஒரு சுமுக உடன்பாடு எட்டப்பட்டுவிட்டது.
அ.தி.மு.க.வுக்கு நல்ல நேரம் இனி ஆரம்பம்.! முதல்வர், துணை முதல்வர் இடையே ஒரு சுமுக உடன்பாடு எட்டப்பட்டுவிட்டது..!

இரு அணிகளும் இணைந்தபோது கட்சியின் முக்கிய முடிவுகளை கலந்து ஆலோசித்து மேற்கொள்ள வழிகாட்டும் குழு அமைக்கப்படும் என முடிவெடுக்கப்பட்டது. அதற்கு தற்போது எடப்பாடி முழு சம்மதம் தெரிவித்திருப்பதாக தெரியவந்துள்ளது.
இதுகுறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி அமைச்சர்களோடும், கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் ஆகியோரும் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னவர் பன்னீரைத் தொடர்புகொண்டு பேசிய கே.பி.முனுசாமி, வழிகாட்டும் குழுவில் இடம்பெறுபவர்கள் யார் என்று ஆலோசித்தார். இதற்கு வசதியாகவே தேனியில் இருந்த பன்னீர் சென்னைக்கு வந்துவிட்டார்.
பன்னீரின் விருப்பப்படி வழிகாட்டும் குழு அமைக்கப்பட்டதால் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்படுவதற்கு ஓ.பன்னீர் எதிர்ப்பு தெரிவிக்க மாட்டார் என தெரியவந்துள்ளது. இப்போது இந்த வழிகாட்டுதல் குழுவில் இடம் பிடிப்பதற்கு இரண்டு குழுவிலும் கடுமையான போட்டி நிகழ்கிறது.