பொது இடத்தில் இளம் நடிகரிடம் வரம்பு மீறிய சீனியர் நடிகை! பிறகு நடந்தது என்ன தெரியுமா?

பொது இடம் என்றும் பாராமல் நடிகருடன் நடிகை நெருக்கமான புகைப்படம் வைரல் ஆகி வருகிறது.


   இந்தி திரையுலகில் ஐட்டம் டான்ஸ் ஆடுவதில் புகழ் பெற்றவர் கிம் ஷர்மா. இவரது ஐட்டம் டான்ஸ்க்க என்றே ஏராளமான ரசிகர்கள் உண்டு. படங்களில் நடிப்பதை விட ஸ்டேஜ் பெர்பார்மன்சுக்கு தான் கிம் சர்மா அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்.

 

   சினம் எனும் தமிழ் திரைப்படத்திலும் கிம் ஷர்மா நடித்துள்ளார். அந்த படம் தமிழில் எதிர்பார்த்த அளவிற்கு செல்லவில்லை. இதனால் தமிழில் கிம் ஷர்மாவை அதன் பிறகு பார்க்க முடியவில்லை.

 

   இந்தியில் பிரபலமான நடிகையாக இருந்தாலும் படங்களை தேர்வு செய்து கிம் நடித்து வருகிறார். அதே சமயம் கிம் ஷர்மா தன்னை விட குறைந்த வயதுடைய நடிகர் ஹர்சவர்தன் ராணேவை காதலித்து வருகிறார்.

 

   அவ்வப்போது மும்பையின் உணவகங்கள், ஜிம் போன்றவற்றில் ராணே – கிம் ஷர்மா ஜோடியை பார்க்க முடியும். அந்த வகையில் மும்பையில் பிரபலமான உணவகம் ஒன்றுக்கு கிம் தன்னுடைய இளம் காதலர் ராணேவுடன் வந்துள்ளார்.

 

   உணவை சாப்பிட்டு முடித்த பிறகு ஓட்டலின் மொட்டை மாடிக்கு இருவரும் சென்றுள்ளனர். அங்கும் திறந்த வெளி உணவகம் உள்ளது. மொட்டை மாடிக்கு சென்ற போது அங்கு இருந்த கிளைமேட் இருவரையும் நிதானம் இழக்கச் செய்துள்ளது.

 

  அப்போது பொது இடம் என்றும் பார்க்காமல் நடிகை கிம் ஷர்மா தனது காதலன் ராணேவை கட்டி அணைத்துள்ளார். இதனை சற்றும் எதிர்பாராத ராணே உடனடியாக ஒரு முத்தம் கொடுத்து கிம்மின் அரவணைப்புக்கு பதில் அளித்துள்ளார்.

 

   பொது இடத்தில் நடிகை கிம் ஷர்மா தனது காதலனுடன் வரம்பு மீறிய காட்சியை அங்கிருந்த சிலர் புகைப்படம் எடுத்த வெளியிட்டுள்ளனர். இந்த புகைப்படம் தற்போது வைரல் ஆகும் நிலையில் பலரும் நடிகையையும் – நடிகரையும் கரைத்து கொட்டி வருகின்றனர்.