சுடுகாட்டில் அயர்ந்து தூங்கிய நபர்..! கொரோனாவால் இறந்துவிட்டார் என உயிருடன் உடல் எரியூட்டப்பட்ட பகீர் சம்பவம்..! உண்மை பின்னணி!

இறுதி சடங்கு கூடத்தில் வேலை செய்யும் ஒருவர் அங்கு அசந்து தூங்கியதால் அவரை கொரோனாவால் இறந்தவர் என்று தவறாக நினைத்து உயிருடன் தகனம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று தற்போது அதிவேகமாக பரவி வருகிறது. அமெரிக்காவில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் குறிப்பாக நியூயார்க்கில் தான் பாதிப்பு அதிகமாக உள்ளது. நியூயார்க்கில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் மிக அதிகமாக வருவதால் அங்கு உயிரிழந்தோரின் சடலங்கள் இறுதி சடங்கு கூடத்தில் வைக்கப்பட்டு தகனம் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் அங்கு இறுதிச் சடங்கு கூடத்தில் வேலை செய்யும் 48 வயதாகும் மைக்கேல் ஜோன்ஸ் என்பவர் தொடர்ந்து 16 மணி நேரம் வேலை செய்ததால் ஏற்பட்ட களைப்பு காரணமாக அங்கு இருந்த ஸ்டெரக்சரில் அசந்து தூங்கியுள்ளார். அந்த இறுதி சடங்கு கூடத்தில் வேலை செய்யும் சக ஊழியர் ஒருவர் இறந்தவர்களின் சடலம் என்று தவறாக எண்ணி தூங்கிக்கொண்டிருந்த அந்த நபரின் உடலை தகனம் செய்துள்ளார் என்ற திடுக்கிடும் தகவல் போலீசார் விசாரணையில் வெளியாகியுள்ளது.

இந்த திடுக்கிடும் சம்பவம் தொடர்பாக மைக்கேல் ஜோன்ஸ் உடன் வேலை செய்யும் சக ஊழியர் ஆண்டர்சன் கூறுகையில் மைக்கேல் ஜோன்ஸ் உயிருடன் தகனம் செய்யும்போது திடீரென ஏற்பட்ட வெப்பம் காரணமாக அவர் அலறியுள்ளார். ஆனால் எங்கிருந்து சத்தம் வருகிறது என்பதை கண்டறிவதற்குள் அவர் சாம்பலாக்கி விட்டார். ஏனெனில் 1400 முதல் 1800 ஃபாரன்ஹீட் வெப்பநிலை காரணமாக அவர் 15 வினாடிகளிலேயே உயிரிழந்திருப்பார் என்று அவர் கூறினார். இந்த திடுக்கிடும் சம்பவம் நியூயார்க்கில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இப்படியாக ஒரு செய்தி பரவி வரும் நிலையில், இது வெறும் வதந்தி என்றும் அப்படி எந்த ஒரு சம்பவமும் நடைபெறவில்லை என்றும் நியுயார்க் நகர நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. இது போன்று ஒரு உடலை தகனம் செய்ய வாய்ப்பு இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.